விஜய்யின் முதல் பட நாயகியின் தற்போதைய நிலை.. ஆளே மாறி வேற மாதிரி இருக்காங்களே

தற்போது வேண்டுமானால் விஜய் மிகப் பெரிய நடிகராக இருக்கலாம் ஆனால் ஆரம்பத்தில் விஜய்யும் சினிமாவில் வெற்றிக்காக போராடிய நடிகர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். விஜய் குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்கள் நடித்தார். ஆனால் நாளை தீர்ப்பு படத்தின் மூலம் தான் கதாநாயகனாக அறிமுகமானார்.

தற்போது விஜய்யுடன் நடிப்பதற்கு பல நடிகைகள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். ஆனால் ஆரம்ப காலத்தில் விஜய்யுடன் நடிப்பதற்கு பல நடிகைகள் தயக்கம் காட்டியதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும் இயக்குனர்கள் கூட விஜய்யை வைத்து படங்களை இயக்குவதற்கு தயங்கினார்கள் என்பது ஊடகங்களில் உலா வந்த தகவல்.

விஜய்யுடன் முதன்முதலில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தனா. அதன்பிறகு விஜய்யுடன் இவர் பெரிய அளவில் படங்களில் நடிக்காவிட்டாலும் விஜய்யுடன் முதலில் ஜோடியாக நடித்த நடிகை என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். அதன் பிறகு ஒருசில படங்களில் நடித்தார்.

அஜித்துடன் மைனர் மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் அதிகமான படங்களில் நடிக்காவிட்டாலும் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அஜித்துடன் இவர் பல வருடங்களுக்கு முன்பே நடித்துவிட்டார். தற்போது மார்டன் உடையில் இவர் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் அஜித்துடன் இணைந்து நடித்த கீர்த்தனாவா இப்படி மாறியுள்ளார் என ஆச்சரியத்தில் அசந்து போயுள்ளனர். இப்போதுகூட விஜய் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கலாம் எனவும் கூறி வருகின்றனர். மேலும் இப்புகைப்படத்தை சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களும் வைரலாகி வருகின்றனர்.