தளபதி விஜய் படம் என்றாலே எப்போதும் மாஸாக இருக்கும். கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் புலி. இப்படத்தை விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரின் நெருங்கிய நண்பரான பி டி செல்வகுமார் தயாரித்திருந்தார். செல்வகுமார் விஜயின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில் இருந்து விஜய்யின் மக்கள் தொடர்பாளராக இருந்துள்ளார்.

புலி படத்தில் பிரபு, ஸ்ரீதேவி, ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன், நந்திதா, தம்பி ராமையா, கருணாஸ், சுதீப், தம்பி ராமையா என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

இயக்குனர் சிம்புதேவன் புலி படத்தை இயக்கியிருந்தார். புலி படத்தின் கதை வைகைப்புயல் வடிவேலுகாக எழுதப்பட்டது. ஆனால் இப்படத்தை பி டி செல்வகுமார் தயாரித்ததால் தளபதி விஜய் செல்வகுமார்காக புலி படத்தில் நடித்தார். விஜய் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று வந்த நிலையில் இத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

சிம்புதேவன் புலி படத்திற்கு முன்னதாக 2006இல் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் வடிவேலு, நாசர், மனோரமா என பலர் நடித்திருந்தார்கள். வரலாற்று நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இதன் தொடர்ச்சியாக இயக்குனர் சிம்புதேவன் வடிவேலுகாக எழுதப்பட்ட புலி படத்தில் வடிவேலு நடித்திருந்தால் படம் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இப்படத்தில் மாஸ் ஹீரோ விஜய் நடித்ததால் புலி படம் தோல்வியை சந்தித்தது.