விஜய்யின் நண்பனை வைல்ட் கார்ட் என்ட்ரியில் களமிறக்கும் பிக்பாஸ்.. பல மடங்கு எகுற போகும் டிஆர்பி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்டது. எனவே ஐந்து வாரத்தை நிறைவடைந்த இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிரபல சீரியல் நடிகர் சஞ்சீவ் நுழைய உள்ளனர்.

இவர் சின்னத்திரையில் சன் டிவி, கலைஞர் தொலைக்காட்சியில் சீரியல் கதாநாயகனாகவும் தொகுப்பாளராகவும் மக்களுக்கு பரிச்சயமானவர். இவர் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தளபதி விஜயின் படங்களில் நண்பராக நடித்தது மட்டுமல்லாமல் விஜயின் நெருங்கிய தோழர் ஆகவும் இருக்கிறார்.

கடைசியாக மாஸ்டர் படத்தில் விஜயுடன் அவருடைய நண்பர் கூட்டமும் இணைந்து நடித்ததில் சஞ்சீவ் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சஞ்சீவ் அளிக்கும் நேர்காணலில் தளபதி விஜய் பற்றிய சுவாரசியமான தகவல்களை அடிக்கடி பதிவிடுவது.

அத்துடன் இவர் குடும்ப நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்ளும் புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பதிவிட்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இந்த சூழலில் சஞ்சீவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால தளபதி ரசிகர்கள் இவருக்கு அமோக வரவேற்பை அளிப்பார்கள்.

எனவே பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைய உள்ள சஞ்சீவுடன் பிக்பாஸ் குழுவினர் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து விட்டதாகவும், விரைவில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

எனவே சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கிய சஞ்சீவ பிக்பாஸில் ராஜுவுக்கு போட்டியாக செம என்டர்டெயினராக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். கண்டிப்பாக தளபதியின் ரசிகர்கள் ஓட்டு உறுதி. அதுமட்டுமில்லாமல் இதுவரை பிக்பாஸ் பார்க்காத தளபதியின் ரசிகர்கள் இவருக்காக பார்க்கத் தொடங்கிவிடுவார்கள், பிக் பாஸ் டிஆர்பி ரேட்டிங் பலமடங்கு அதிகரிக்குவும் வாய்ப்புள்ளது.

கெட்டது செய்ய தான் ஜாதி தேவை, நல்லதுக்கு இல்ல.. இன்றைய அரசியலை தாக்கிய அருண்ராஜா காமராஜ்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமுதாயம் குறித்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் மீது தற்போது அதிக ...