விஜய்டிவி பிரபலத்திற்கு ரூ.1 லட்சம் உதவிய தளபதி விஜய்.. 8 வருட நட்பின் வெளிப்பாடு!

தொலைக்காட்சிகளில் விஜய் டிவியை பார்ப்பதற்கென்றே தனிக் கூட்டம் உள்ளது. அந்த வகையில் விஜய் டிவி சுவாரஸ்யத்திற்கு என்டர்டைன்மென்ட்டுக்கும் பஞ்சமில்லாத நிகழ்ச்சிகளை வாரிவழங்கும். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்து ‘பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற டான்ஸ் ஷோ ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதில் இந்த வாரம் கோலிவுட் சுற்று நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஏதோ ஒரு படத்தை எடுத்து அதில் வரும் பாடல்களுக்கும் நடனமாட வேண்டும். இதில் பாலாஜி-நிஷா ஜோடி கில்லி படத்தை தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று பாலாஜியிடம் கேட்டபோது,

இதுவரை யாரும் அறிந்திராத பல சுவாரசியமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். தளபதி விஜய்யின் ஆரம்ப கால படங்களான பிரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும், நிலாவே வா, சச்சின் உள்ளிட்ட பல படங்களில் விஜய்க்கு நண்பராக பாலாஜி நடித்துள்ளார்.

கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக விஜய் உடனே பல படங்களில் பயணம் செய்துள்ள பாலாஜிக்கு, விஜயுடன் கிடைத்த நட்பு தான் கடவுள் கொடுத்த வரம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சில வருடங்களுக்கு முன்பு பாலாஜியின் தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது,

படப்பிடிப்புத் தளத்தில் சோகமாக இருந்த பாலாஜி பார்த்த விஜய் உதவியாளரிடம் என்ன பிரச்சனை என்பதை அறிந்துகொண்டு, பாலாஜியின் தந்தை அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தினாராம்.

இந்த சம்பவத்தை தற்போது பாலாஜி பிக்பாஸ் ஜோடிகளில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து உள்ள ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜெய்பீம் பட உண்மை நாயகி செங்கேணிக்கு வீடு கட்டித் தரும் பிரபல நடிகர்.. கஷ்டமான கர்ணனா மாறிடுறாரு!

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் அமேசான் தளத்தில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி வெளியாகும் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் ...