விஜய்சேதுபதி தப்பித்து விட்டார், என்ன மாட்டி விட பாக்குறீங்களா.? தெறித்து ஓடிய பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி அவர்கள் மிக நல்ல நடிகராக அறியப்பட்டிருந்தாலும் பல படங்களில் அவர் நடித்து பெயர் வாங்கி இருந்தாலும் ஒரே ஒரு படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமான பிறகு ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் எதிர்ப்பையும் சம்பாதித்து விட்டால் அதற்கு காரணமாக அமைந்தது அவர் நடிக்கயிருந்த 800 திரைப்படம் இந்த 800 என்ற திரைப்படம் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகி இருந்தது.

இந்த படத்தில் இவர் நடிக்க கூடாது என்று பல்வேறு தரப்புகளில் இருந்தும், எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்களை தொடர்ந்து அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க மாட்டேன் என்று கூறி விலகிய பிறகு இந்த படத்தின் மொத்தக் கதையும் தயாரித்த இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி இந்த படத்திற்கான ஹீரோவை வலைவீசி தேடிக் கொண்டிருந்தார்.

தமிழில் இனிமேல் யாரும் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைத்து ஹீரோவை தேடி ஹிந்தி பக்கம் சென்று விட்டார். அப்படி அவர் ஹிந்தி பக்கம் தேடி ஒரு ஹீரோவையும் ஒப்பந்தம் செய்துவிட்டார். சரி ஹீரோயின் ஆவது தமிழ்நாட்டில் கிடைப்பார்களா என்று வலை வீசி தேடி பார்த்த போது தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரக்கூடிய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த பிரியா பவானி சங்கரை கேட்டிருக்கிறார்.

இந்தப் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்கும்போது இந்தப் படத்தின் சர்ச்சை பற்றி தெரிந்து கொண்ட பிரியா பவானி சங்கர், நான் நடிக்க மாட்டேன் என்று கூறி ஒதுங்கிக் கொண்டாராம். நீங்கள் கேட்பதை விட டபுள் மடங்கு சம்பளம் தருகிறோம் நீங்கள் இந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் எத்தனையோ முறை கேட்டும் அவர் தான் நடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அப்படி பல சர்ச்சைக்குள்ளான இந்த 800 என்ற திரைப்படம் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையைச் சொல்லும் படமாக இருப்பதால் தான் இந்த படத்தில் நடிக்க இவ்வளவு தயக்கம் காட்டுகின்றனர் தமிழ் நடிகர் நடிகைகள். தமிழில் முன்னணி நடிகரான விஜய்சேதுபதிக்கே இந்தப் படத்தில் நடிப்பதற்கு பல விதமான எதிர்ப்புகள் கிளம்பிய போது நான் எப்படி இந்த படத்தில் நடிப்பது என்று கூறி பிரியா பவானி சங்கர் விலகிவிட்டார்.

ஈழத்தமிழர் பிரச்சனை தமிழகத்தில் எவ்வளவு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் நான் இந்தப் படத்தில் நடித்தால் அது எனக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும் என்று கூறி பிரியா பவானி சங்கர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது. விஜய்சேதுபதியே ஒதுங்கிவிட்டார் நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என்று கோபமாக பேசிவிட்டு பிரியா பவானி சங்கர் விட்டால் போதும் என்று ஓடி விட்டாராம்.