மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிசாசு 2. இப்படம் முழுக்க முழுக்க ஹாரர் திரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தினை கூடிய விரைவில் திரையரங்கில் வெளியிடுவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் தற்போது படக்குழுவினர் தொடர்ந்து பல சேனல்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

இப்படம் முழுக்க முழுக்க இரவில் நடக்கும் சம்பவத்தைக் கொண்டு படத்தை எடுத்துள்ளனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களிடம் பெரிதும் வரவேற்பை பெறும் என மிஸ்கின் கூறியுள்ளார். அதனால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆண்ட்ரியா இப்படத்தில் நிர்வாணமான காட்சியில் நடித்துள்ளதாக மிஸ்கின் கூறினார். மேலும் ஆண்ட்ரியாவின் நடிப்பை பார்த்து அசந்துபோனதாகவும் அவருக்கு சரியான கதாபாத்திரத்தைதான் கொடுத்துள்ளேன். இப்படத்தின் மூலம் ஆண்ட்ரியாவிற்கு சரியான வரவேற்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆண்ட்ரியாவை பற்றி பேசி வந்த மிஸ்கின் அதற்கு அடுத்தபடியாக விஜய் சேதுபதி புகழ்ந்து தள்ள ஆரம்பித்தார். விஜய்சேதுபதி வெறும் 15 நிமிடங்கள்தான் படத்தில் வருவார்கள். ஆனால் அவரது நடிப்பை பலரும் பாராட்டுவார்கள் என கூறினார். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதியின் நடிப்பு தன்னை வியந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது பிசாசு படத்தை தெலுங்கு சினிமாவில் வெளியிட மிஸ்கின் திட்டமிட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கு தெலுங்கில் பிசாசி என பெயரிட்டுள்ளார். ஏற்கனவே விஜய் சேது நடிப்பில் வெளியான உப்பண்ணா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனால் தற்போது விஜய்சேதுபதிக்கு தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.

இதனை சரியாக பயன்படுத்தி மிஸ்கின் கல்லா கட்ட திட்டமிட்டுள்ளார். அதனால தான் பிசாசு படத்தை தெலுங்கு சினிமாவிலும் வெளியிட முடிவு செய்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறிவருகின்றனர். விஜய் சேதுபதியின் 15 நிமிட காட்சியை வைத்து பல கோடி லாபம் பார்த்து விடலாம் என்று மிஸ்கின் பக்கா பிளான் போட்டுள்ளாராம்.