விஜய்க்கு தடைபோட்ட வெங்கட் பிரபு.. விபரீதத்தை கையிலெடுக்க காத்திருக்கும் இயக்குனர்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் மங்காத்தா. அஜித் கேரியரில் இப்படி ஒரு கதாபாத்திரம் இனி அவர் பண்ண முடியாது என்கிற அளவிற்கு அமைந்து இருந்த ஒரு படம். அந்த படத்திற்கு பின்பு, வெங்கட் பிரபு ஒரு சூப்பர் டூப்பர் இயக்குனராக மாறிவிட்டார். அந்த படத்திற்கு பிறகு அதில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அதிலும் அர்ஜுன் கதாபாத்திரம், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் திரையரங்குகள் முழுவதும் விசிலை பறக்க விட்டது. அப்படி ஒரு மாஸ் டிவிஸ்ட்டை வெங்கட் பிரபு படத்தில் வைத்து இருப்பார். அப்படிப்பட்ட அந்த அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பல நடிகர்கள் வெங்கட் பிரபுவிடம் விசாரித்து இருந்தார்கள். ஆனால் தளபதி விஜய் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவிடம் கேட்டார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா..?

தளபதி விஜய்யின் சமகால போட்டியாளராக கருதப்படும் ஒரு நடிகர்தான் அஜித்குமார். அவர் நடிக்கும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் தோன்றுவதற்காக வெங்கட் பிரபுவிடம் விஜய் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாக வெங்கட் பிரபுவிடம் கேட்டிருக்கிறார்.அதற்கு வெங்கட்பிரபு நீங்க ஒரு மாஸ் ஹீரோ இன்னொரு மாஸ் ஹீரோவோட வில்லனா நடிச்சா உங்கள் ரசிகர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று கேட்டு இருக்கிறார். அது எப்படி நீங்களே முடிவு செய்து கொள்வீர்கள் அதை நான் சொல்ல வேண்டும் என்று விஜய் கோபப்பட்டும் இருக்கிறார்.

அஜித் நடிக்கிறார் என்றால் நான் வில்லனாக கூட நடிக்க ரெடி என்று வெங்கட் பிரபுவிடம் தளபதி விஜய் கூறியிருக்கிறார். இருந்தும் அந்த வாய்ப்பு அந்த படத்தில் இல்லாமல் போனது. இதனால் ஒரு நல்ல கதாபாத்திரம் கைவிட்டுப் போய் விட்டதே என்று தளபதி புலம்பிய காலமும் இருக்கிறதாம். ஒருவேளை அப்படி நடந்திருந்தால் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய படமாக இந்தப் படம் அமைந்திருக்கும். அதன்பிறகு பலமுறை வெங்கட்பிரபு தளபதி விஜய் மற்றும் அஜீத் குமாரை ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்க பல முயற்சிகளை எடுத்தார்.

ஆனால் எந்த முயற்சியும் கைகூடவில்லை . இவர்கள் இருவரையும் இணைத்து நடிக்க வைக்க வேண்டும் என்று பல இயக்குனர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் அதற்கான கதைக்களம் இதுவரை கிடைத்த பாடில்லை . இருவருக்கும் சமமான மாஸ் தமிழ் சினிமாவில் இருக்கிறது . அப்படி இருக்கையில் தனித்தனியாக இருவருக்கும் மாஸ் கொடுக்க வேண்டும் . அதில் ரசிகர்கள் கொஞ்சம் கோபித்துக் கொண்டாலும் இயக்குனரின் கதி அதோகதிதான்.

உச்ச நடிகர்களே இப்படி தயாராக இருக்கும் பட்சத்தில் சரியான கதைக் களத்தோடு இயக்குனர்கள் அவர்களை அணுகினால் நிச்சயம் அப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தி திரைப்படங்களில் எந்தவித இமேஜ் எதுவும் பார்க்காமல் பல நடிகர்கள் கலந்து நடிக்கும்போது அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைகிறது. அதேப்போல தமிழ் சினிமாவிலும் நடந்தால் அது ரசிகர்களின் சண்டைக்கு முற்று புள்ளி வைக்கும்.