விஜய்க்கு ஜோடியாக நடிக்க போட்டி போடும் ஹீரோயின்கள்.. அதிர்ஷ்ட காத்து யாரு பக்கம் வீச போகுதோ?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து நடிகர் விஜய் தன்னுடைய 66 வது திரைப்படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் 66 என்று படக்குழு அழைத்து வருகிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார். மேலும் இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள் என்பது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இரண்டு ஹீரோயின்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். பூஜா ஹெக்டே தற்போது தான் விஜய்யுடன் இணைந்து நடித்து முடித்துள்ளதால் அவர் இந்த படத்தில் நடிக்க நிச்சயம் வாய்ப்பு இல்லை.

இதனால் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது. இதுபற்றிய அறிவிப்பை படக்குழு வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிட இருக்கின்றனர். மேலும் படத்தின் பூஜையையும் பிப்ரவரி இருபத்தி ஒன்றாம் தேதி நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம் விஜய்யின் முந்தைய படங்களை போல் இல்லாமல் சென்டிமென்ட் கொண்டதாகவும், ரசிகர்களுக்கு பிடிப்பது போலவும் இருக்கும் என்று இயக்குனர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் விஜய் இந்த படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் எரோட்டோமேனியா என்ற நோயினால் பாதிக்கப்படும் ஒரு நோயாளியாகவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.