விஜயையும் அடிச்சு தூக்கிய அஜித்.. ஒரே நாளில் பாக்ஸ் ஆபீஸ்சை நிரப்பிய வலிமை!

தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் தளபதி விஜய் இருவருடைய ரசிகர்களுக்கும் திரையரங்கில் கடும் போட்டி நிலவுவது வழக்கம்தான். இருப்பினும் இந்த இரண்டு முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் இவர்கள் இருவரையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அந்த வகையில் தல ரசிகர்கள் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக காத்திருந்த வலிமை திரைப்படம் நேற்று முந்தினம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்னிலையில் ஒரே நாளில் வலிமை திரைப்படம், ரூபாய் 25.30 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

இதுவரை தமிழகத்தில் திரையிடப்பட்ட அனைத்து படங்களையும் வலிமை திரைப்படம் முறியடித்து வசூலில் இமாலய வெற்றி கண்டிருக்கிறது. குறிப்பாக தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான சர்கார் திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் ரூபாய் 23 கோடி வசூலை தமிழ்நாட்டில் தட்டியது.

ஆனால் அன்றைய தினத்தில் சர்க்கார் திரைப்படத்தின் வசூல் பெரிதாக பார்க்கப்பட்டு கொண்டாடப்பட்டது. ஆனால் அதன்பிறகு தற்போது வலிமை திரைப்படம் தளபதி விஜயின் சர்க்கார் திரைப்படத்தை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ரூபாய்  25 கோடிக்கு மேல் ஒரே நாளில் வசூல் செய்திருப்பது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் வலிமை படத்துக்கு தல ரசிகர்கள் கொடுத்திருக்கும் அமோக வரவேற்பு கோலிவுட் வட்டாரத்தில் தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது. அதுமட்டுமின்றி வலிமை படத்தின் வசூல் சாதனையையும் தல ரசிகர்கள் சோசியல் மீடியாவை அதிகம் பதிவிட்டு கெத்து காட்டுகின்றனர். ரஜினியின் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூலயும் வலிமை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

வலிமையில் ஒரு சில காட்சிகள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால் ஒரு 14 நிமிட காட்சிகளை கட் செய்து இன்று முதல் வெளியிடப்படவுள்ளது. ஏனென்றால் சென்டிமென்ட் காட்சிகள் எதுவுமே ரசிகர்களுக்கு பிடிக்காத சூழ்நிலை அமைந்து விட்டது.