விஜயகாந்தை மாடர்னாக மாற்றிய நடிகை.. கடைசிவரை நிறைவேறாத காதல்

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவை ஆட்சி செய்த காலத்தில் தன்னுடைய அசாத்தியமான நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார் கேப்டன் விஜயகாந்த். ஆரம்பத்தில் எம்ஜிஆரின் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட விஜயகாந்த் சினிமாவில் வருவதற்காக பல போராட்டங்களை கடந்த சாதித்துள்ளார். தற்போது வரை விஜயகாந்த் ரசிகர்கள் அவருக்காக துணை நிற்கின்றனர்.

தன்னுடைய உடல்வாகு, உடை, பேச்சு என அனைத்தும் கிராமத்து சாயலில் இருந்த விஜயகாந்தை ஸ்டைலாக மாற்றியதில் பெரும் பங்கு நடிகை ராதிகாவிற்கு உண்டு. இவர்கள் இருவரும் சேர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்கள். மேலும் இவர்கள் ஜோடியாக நடித்தாலே அது ஹிட் படம் தான் என ரசிகர்கள் அப்போதே கணித்துவிடுவார்கள்.

அந்த அளவுக்கு இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி வேலை செய்யும். இந்நிலையில் விஜயகாந்த் மற்றும் ராதிகா இருவரும் காதலிப்பதாக அப்போதைய செய்திதாள்களில் கிசுகிசுக்கள் வெளியானது. அது உண்மைதான் என பல திரைபிரபலங்களும் கூறியுள்ளனர்.

ஆனால் சில பத்திரிக்கையாளர்கள் நடுவில் புகுந்து குட்டையை குழப்பிய தான் இவர்களது காதல் திருமணம் வரை போகாமல் பாதியிலேயே நின்று போனது. மேலும் இதனால் ராதிகா மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை வரை சென்றார் என்ற செய்திகளும் அப்போது வெளியாகியிருந்தது.

அதன் பின்பு இவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையை வேறு விதமாக அமைத்துக் கொண்டனர். ராதிகா தன்னுடன் நடித்த பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு சில காரணங்களால் இந்த திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் அதன் பிறகு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் செய்தார்.

இந்த வாழ்க்கையும் அவருக்கு சரியாக அமையவில்லை. இந்நிலையில் கடந்த 2001 இல் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். தற்போது வரை இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். விஜயகாந்த் 1990 இல் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.