
உலகநாயகன் கமல் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கேங்ஸ்டர் படமே விக்ரம். இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. அனிருத் இசை, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங். விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராமன், ஆன்டனி வர்கீஸ், அர்ஜுன் தாஸ், ஷிவானி நாராயணன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்,
கமல் ஒய்வு பெற்ற போலீஸ், விஜய் சேதுபதி கேங்க்ஸ்டர், பாகாத் பாசில் விஞ்ஞானியாகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் எது உண்மை என்பது லோகேஷுக்கே வெளிச்சம். கமல் சமீபத்தில் நடந்த ஜீ டிவியின் ராக்ஸ்டார் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தார். அப்பொழுதும் அதே தாடி கெட் அப்பில் தான் இருந்தார்.
எனினும் வயதான தோற்றம் மட்டுமல்ல படத்தின் ஒரு பகுதியில் இளமையான தோற்றத்திலும் வருவார் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள். 80களில் இருந்தது போன்ற லுக்கில் காட்சிகள் உள்ளதாம். மேக் அப் மட்டுமன்றி புதிய கிராபிக்ஸ் டெக்கனாலஜி கொண்டு இதனை சாத்தியம் ஆகப்போகிறாராம் இயக்குனர் லோகேஷ்.
இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மீண்டும் எகிற வைத்துள்ளது.