விக்ரம் படத்தில் இணைந்த சன் மியூசிக் தொகுப்பாளினி.. காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வராம போகுமா.!

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் தான் விக்ரம். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தவிர நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் இப்படத்தில் இணைந்துள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான நடிகை சிவானி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் மற்றொரு சின்னத்திரை நடிகையான மைனா என்ற நந்தினியும் விக்ரம் படத்தில் இணைந்துள்ளதாக ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.

சிவானி மற்றும் நந்தினி ஆகிய இருவரும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக விக்ரம் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் இருவரை தொடர்ந்து மற்றொரு சின்னத்திரை நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான மகேஷ்வரியும் விக்ரம் படத்தில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து மகேஸ்வரி கூறியுள்ளதாவது, ” கமல் சார் அலுவலகத்திலிருந்து எனக்கு போன் செய்து விக்ரம் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டனர். நான் யாரோ என்னை ப்ராங்க் செய்வதாக நினைத்தேன். பின்னர் தான் அது உண்மை என தெரிய வந்தது. ஆனால் அவர்கள் எந்தவொரு ஆடிசனும் வைக்கவில்லை. கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் கூறவில்லை. நேரடியாக ஷூட்டிங்கிற்கு வர சொன்னார்கள்.

ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற பின்னர் தான் என் கதாபாத்திரம் என்ன என்பதே எனக்கு தெரிந்தது. எனக்கு விஜய் சேதுபதி சாருடன் தான் அதிக காட்சிகள் என்பதால் பல சீன்களில் அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். லோகேஷ் கனகராஜ் ஒரு சிறந்த இயக்குனர். இந்த படத்திலும், இதுபோன்ற இளம் குழுவினருடனும் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார்.