விக்ரம் படத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபல நடிகர்.. மாஸ் பண்றீங்க ப்ரோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. பிக்பாஸ் வீட்டில் அனைவரையும் கலாய்த்து கொண்டு இவர் செய்யும் குறும்பு தனம் பலராலும் ரசிக்கப்பட்டது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். குறிப்பாக இவரது நடனத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ள சாண்டி தற்போது நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் படம் தான் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகளை இந்தாண்டுக்குள் முடித்து விட்டு படத்தை அடுத்தாண்டு கோடை விடுமுறையில், வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தான் இப்படத்தில் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இது குறித்து சாண்டி கூறியுள்ளதாவது, “விக்ரம் படத்தில் நடன இயக்குனராக பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சாருக்கு நன்றி. இப்படம் நிச்சயமாக என் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்கும். உங்களுடன் பணிபுரிவது ஒரு அற்புதமான கற்றல் அனுபவம்” என பதிவிட்டுள்ளார்.

சாண்டி நடனம் அமைத்தால் நிச்சயம் அந்த பாட்டு ஹிட்டாகி விடும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். சமீபத்தில் கென் கருணாஸ் நடித்திருந்த ஆல்பம் பாடல் ஒன்றிற்கு சாண்டி நடனம் அமைத்திருந்தார். அந்த பாடல் மட்டுமல்லாமல் டான்ஸ் ஸ்டெப்பும் பயங்கர வைரலானது குறிப்பிடத்தக்கது. எனவே நிச்சயம் விக்ரம் படத்தில் டான்ஸ் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.