விக்ரமை விடாமல் துரத்தும் சனி.. கோப்ரா படத்திற்கு கெடு வைத்த ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிலும் பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்திருப்பதால் விக்ரமுக்கு ஸ்கோப் குறைவுதான். இதனால் கோப்ரா படத்தை மலைபோல் நம்பி உள்ளார் விக்ரம்.

அதிலும் இப்படத்தில் பத்திற்கும் மேற்பட்ட கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளாராம். ஆனால் கோப்ரா படம் இழுத்துக் கொண்டே போகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதத்திற்கு முன்பே முடிந்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து எடிட்டிங் வேலைகளை இழுத்துக்கொண்டே போகிறாராம்.

ஒரு கட்டத்திற்கு மேல் கடுப்பான விக்ரம் டப்பிங் வேலைகளை கூட முடிக்காமல் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பின்பு பேச்சுவார்த்தை நடத்தி மற்ற வேலைகளை விக்ரம் முடித்துக் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி கோப்ரா படத்தை வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இப்பொழுதும் இயக்குனர் வி எப் எக்ஸ் வேலைகள் இருக்கிறது என்று இழுத்தடிக்கிறார். இதனால் அறிவித்த தேதியில் கோப்ரா படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் இயக்குனரை ரெட் ஜெயன்ட் மூவிஸ் இடம் அழைத்து சென்றுள்ளது.

அதாவது கோப்ரா படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் கைப்பற்றியுள்ளது. இதனால் இயக்குனரிடம் உதயநிதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்தார். கடைசியாக கோப்ரா படத்தின் இயக்குனர் ஆகஸ்ட் 20 க்குள் படத்தை முடித்து தருகிறேன் என கூறியுள்ளாராம்.

அதற்கு ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் சம்மதித்து உள்ளதாம். இதனால் தற்போது முழு வீச்சாக கோப்ரா படத்தின் வேலையில் ஈடுபட்டு வருகிறாராம் அஜய் ஞானமுத்து. இதனால் மிக விரைவில் கோப்ரா படம் ரிலீசுக்கு தயாராகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

யாஷிகாவை வைத்து டிஆர்பி ஏற்ற பிளான் போடும் விஜய் டிவி.. நியூ இயருக்கு நல்லா பண்றாங்கப்பா

புதுவருடம் பிறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அனைத்து சின்னத்திரை சேனல்களும் ரசிகர்களை கவர்வதற்கு பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ரெடியாக உள்ளது. அதிலும் விஜய் டிவி சின்னத்திரை பிரபலங்களை வைத்து வேர் இஸ் ...