விக்னேஷ் சிவன், நயன்தாரா மீது கமிஷனரிடம் புகார்.. என்னென்ன கதை சொல்றான் பாருங்க!

தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். நயன்தாரா நீண்ட காலமாக சர்ச்சைக்கு பின்பு சில ஆண்டு காலமாக விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர்கள் இருவரும் லிவ்விங் ரிலேஷன்ஷிப்ல் இருக்கின்றனர்.

நயன்தாரா சினிமாவை தவிர மற்ற தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் காத்துவாக்குல 2 காதல், நெற்றிக்கண் போன்ற பல படங்களை தயாரித்து உள்ளனர்.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காத்துவாக்குல 2 காதல். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் படத்தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயர் தற்போது சர்ச்சையாகி உள்ளது. சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்ற சமூக ஆர்வலர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, போலீசார் ரவுடிகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சினிமாவில் முன்னணி பிரபலங்கள் ஆக உள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்திருப்பது அதிர்ச்சி அடைய வைக்கிறது என அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் நானும் ரவுடி தான். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகுதான் இருவரும் ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயர் வைத்துள்ளனர். எனவே இந்த நிறுவனத்தை தடை செய்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என கண்ணன் புகார் அளித்துள்ளார். இந்தச் செய்தி தற்போது சினிமா வட்டாரத்தில் பெரிய சர்ச்சையாகியுள்ளது.