விக்னேஷ் சிவனிடம் சிம்பு சொன்ன விஷயம்.. அப்புறம் வாழ்க்கையே மொத்தமா மாறிடுச்சு

சமிபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கு முன்னதாகவே சிம்புவின் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

அதாவது சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் 2007ம் ஆண்டில் வெளியான போடா போடி படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். அப்போதைய காலகட்டத்தில் சிம்புவை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்குவதை பலரும் ஆச்சரியமாக பார்த்தார்களாம். மேலும் சிம்புவுடன் பணியாற்றும்போது பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இயக்குனர் மட்டுமல்லாமல் பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் விக்னேஷ் சிவன். இந்நிலையில் போடா போடி படத்தில் கூட மூன்று பாடல்கள் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இப்பாடல் வரிகளை எழுதும்போது அருகில் சிம்பு இருந்துள்ளார்.

அப்போது இந்த வரிகளுக்கு பக்கத்தில் இந்த வார்த்தைகளை சேர்த்துக்கொள் என சிம்பு விக்னேஷ் சிவனுக்கு அறிவுரை கூறியுள்ளார். இதனால்தான் அவருக்கு பாடல் எழுதுவதில் அதிக ஆர்வம் வந்ததாம். சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் விக்னேஷ் சிவன் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

அதில் இடம் பெற்ற அம்மா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ஒருவரை வாழ்க்கையில் தூக்கி விட இன்னொருவர் கண்டிப்பாக வேண்டும். அப்படி தான் சிம்பு எனது வாழ்க்கையை தூக்கி விட்டார் என விக்னேஷ் சிவன் பெருமையாக கூறியுள்ளார்.

அதேபோலதான் நயன்தாராவையும் சிம்பு கொடுத்து இருப்பாரோ என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். என்னதான் இருந்தாலும் நயன்தாராவின் ராசி தற்போது விக்னேஷ் சிவனுக்கு கூரையை பிரித்து கொட்டுகிறது. அடுத்தடுத்த தொழில் முதலீடு, அஜித் பட வாய்ப்பு அதற்கு அடுத்தபடியாக தனக்கு பிடித்த ஃபெராரி காரையும் சொந்தமாகவே வாங்கிவிட்டார் விக்னேஷ் சிவன்.