விக்னேஷ் சிவனால் படாத பாடுபடும் தயாரிப்பாளர்.. விட்டதைப் பிடிக்கும் முடிவில் நயன்தாரா அண்ட் கோ

தேதி அறிவிக்கப்பட்ட பின் ஒரு படம் அந்த தேதியில் வெளியாகவில்லை என்றால், அது அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் சிக்கலை உண்டாக்கி விடும். ஆகவே தான் பெரும்பாலான படங்களை குறிப்பிட்ட தேதியில் வெளியிட அதிக முயற்சி செய்வார்கள். தற்போது அப்படி சொல்லிய தேதியில் படத்தை வெளியிட முடியுமா என ஒரு தயாரிப்பாளர் குழப்பத்திலும் பயத்திலும் உள்ளார்.

அவர் 7 ஸ்கிரீன் லலித் குமார் தான். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என நட்சத்திர பட்டாளமே நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை லலித் குமார் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான நான் பிழை மற்றும் டூடூடூ, ரெண்டு பாடல் என முன்று பாடல்கள் வெளியாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து படத்தில் இருந்து டூடூடூ பாடலின் ப்ரோமோ அண்மையில் வெளியாகியது. இதுவும் ஹிட்டாகி போனது. இதனால் படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாக்கியுள்ளது.

ஏற்கனவே படத்திலுள்ள நட்சத்திரங்களால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த படம் பாடல் வெளியான பிறகு இது இன்னும் அதிகமாகி போயிருக்கிறது. இதனை உணர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது எடிட்டிங் முடித்த பின்னர் படத்தை மீண்டும் சில பல மாற்றங்களுடன் ரீ-எடிட் செய்து வருகிறார்.

தானா சேர்ந்த கூட்டம் படம் கொஞ்சம் சறுக்கியதால், எப்படியும் இந்த படத்தில் ஹிட் அடித்து விட வேண்டும் என பார்த்து பார்த்து மீண்டும் செதுக்கி விட்டதைப் பிடிக்கும் முடிவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மெனக்கெட்டு வருகின்றனர். ஆனால் இதனால் குறித்த தேதியில் வெளியிட முடியாமல் போய் விடுமோ என லலித் குமார் பதற்றத்தில் உள்ளார். ஆனால் நான் அதற்குள் வேலைகளை முடித்து விடுவேன் என விக்னேஷ் சிவன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.

படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தான் தயாரிப்பாளர் லலித் குமாருக்கு கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான டீசரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.