வாவ்! பிக்பாஸ் சீசன்5 வீட்டின் பாத்ரூம் முதல் பெட்ரூம் வரை.. இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்!

இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன்5 விஜய் டிவியில் கோலாகலமாக துவங்கப்பட உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் வீடு எப்படி இருக்கிறது என பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் பிக்பாஸ் வீடு புதிய டிசைன்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே வீட்டின் நுழைவு வாயிலில் பிக் பாஸ் சீசன்5-ஐ குறிக்கும் விதத்தில் ஐந்தாம் நம்பரை புற்களை கொண்டு வடிவமைத்து என்ட்ரன்ஸில் வைத்துள்ளனர். அதன் பிறகு நீச்சல் குளத்தை முழுவதுமாக கம்பி வேலி அமைத்து அதை சிறிய தோட்டமாக மாற்றியுள்ளனர்.

அத்துடன் பாத்ரூம் ஏரியாவில் முகம் பார்க்கும் கண்ணாடியை அழகிய சைக்கிள் வடிவத்தில் ரொம்பவே கிரியேட்டிவ் ஆக வடிவமைத்துள்ளனர்.

அதேபோல் கடந்த சீசனில் ஜல்லிக்கட்டு மாடு இருந்ததுபோல இந்த சீசனில் பீனிக்ஸ் பறவை செட்டப் செய்துள்ளனர். அதைப்போல் சண்டை போடுவதற்கு ஏதுவாக மிகப்பெரிய டைமிங் டேபிள் வைக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல் ஆண்கள் பெண்கள் என இரு விதமான பெட்ரூம்கள் உள்ளது. அதேபோல் சமையல் அறை விலாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பச்சை பசேலென்று பிக் பாஸ் சீசன் 5 இன் வீட்டின் உட்பகுதி மற்றும் வெளி புறத்தையும் முழுவதையும் காட்டும் புகைப்படங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் சமூக வலைதளங்களில் பார்க்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா செய்த செயல்.. ஆடி போன படக்குழுவினர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா சமீபகாலமாக ஒரு சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், கதைக்கு முக்கியத்துவம் படங்களுக்கு தான் நடிப்பதற்கு அதிகம் ஆர்வம் ...