வாழ்க்கையை வெறுத்து விவாகரத்தான 9 ஜோடிகள்.. புகழ் போதைய பார்த்துட்டா கழட்டி விட்டுருவாங்க போல

வணக்கம் நண்பர்களே! நமது வலைத்தளத்தின் வாயிலாக பல சினிமா கட்டுரைகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நாம் பார்க்க இருக்கும் தலைப்பு விவகாரத்தால் விவகாரமாக மாறிப்போன சில பிரபலங்களைப் பற்றி.

தனுஷ் – ஐஸ்வர்யா: சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் மகளும் இயக்குனர், நடன கலைஞர் ஆன ஐஸ்வர்யா, கஸ்தூரி ராஜா வின் மகனான தனுஷுக்கு காதல் மலர்ந்தது. இதுவே அப்போது மிகப்பெரும் ஆச்சரியமாக இருந்தது. சர்க்கரை பொங்கல் வடகறி போல தான் இருந்தது. ஆனாலும் பல வருடங்கள் ஒன்றாக தான் வாழ்ந்தார்கள். இவர்களுக்கு இரு மகன்கள். இந்நிலையில் யாரும் எதிர் பார்க்காத வண்ணம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். கொஞ்ச காலமாகவே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தான் வாழ்ந்து வந்தனர். இப்போதும் அவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உள்ளது என்று சில கோலிவுட் பட்சிகள் சொல்கின்றன.

பாலா – முத்துமலர்: இயக்குனர் பாலா திருமணத்திற்கு சென்ற அனைவருக்கும் பொறாமையாக தான் இருந்திருக்க வேண்டும். காரணம் முத்துமலர் அன்ற அழகான அவரது மனைவியை பார்த்த காரணத்தால். இவர்களும் பல வருடங்கள் ஒன்றாக சிறப்புடன் வாழ்ந்தனர். பாலா கொஞ்சம் கோவக்காரர், முத்துமலர் அரசியல் புள்ளி ஒருவரின் முன்னாள் காதலி என்றும் பல கருத்துக்கள் உண்டு. 6 வருடங்களாக தனித்தே வாழ்ந்து வரும் இருவருக்கும் ஒரு பெண் பிள்ளை உண்டு. அவர் அம்மாவிடம் தான் இருக்கிறார். தற்போது விவாகரத்து பெற்று அவரவர் வழியில் வாழ்கின்றனர்.

இமான் – மோனிகா: இசையமைப்பாளர் இமான் அவர்கள் மோனிகாவை 2008ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. சிறப்பாகவே சென்ற இவர்களது திருமண வாழ்க்கை 2020ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. ஆனாலும் பிரிவுக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை. இருக்கதில்லேயே ரொம்ப டீசன்டான விவாகரத்து இவர்களோடது தான் என்று சொல்லலாம்.

நாகசைதன்யா – சமந்தா: நாகர்ஜுனா மகன் நாக சைதன்யாவை சமந்தா திருமணம் செய்ய போகிறார் சமந்தா என்றதும் இங்கு பலருக்கும் வயிறு எரிந்தது. தெலுங்கர் ஒருவரை மணக்க வேண்டுமா? என்று கேள்வியும் எழுப்பினர். அந்த காரணமோ தெரியவில்லை வெகு சீக்கிரமே இவர்கள் பிரிந்துவிட்டனர். தற்போது நாக சைதன்யாவிற்கு பெண் பார்த்து வருகின்றனர். சமந்தா இதற்கு முன்னர் நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்ததாக கூறப்படகிறது.

டிடி – ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன்: டிடி என்று செல்லமாய் அழைக்கப்படும் திவ்யதர்ஷினியம் விஜய் டிவி ப்ராப்பர்டி தான். 1999ஆம் ஆண்டு தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சினிமாவில் ஹீரோ தங்கை, எதிர்வீட்டு பெண், செய்தி வாசிப்பாளர் போன்ற வேடங்களில் நடித்து வந்தார். பல பொது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் மூன்றே வருடங்களில் விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர் நடிகர் தனுஷுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார் என்றும் கூறுவார்கள்.

தாடி பாலாஜி – நித்யா: தாடி பாலாஜி என்று நன்றாக அறியப்படும் காமெடி நடிகர் பாலாஜி. இவருக்கும் நித்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் இருந்தே இவர்களுக்குள் பிரிவினை இருந்த போதும் டிவி நிகழ்ச்சிகள் மூலம் ஒன்றாகவே இருந்தனர். இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் புகழ் பெற்ற தம்பதி தற்போது பிரிந்துவிட்டனர். நித்யாவின் மீது பல குற்றசாட்டுகளை வைத்தார் பாலாஜி. பதிலுக்கு நித்யாவும் வைத்தார். இவர்களுக்கு மத்தியஸ்தம் செய்து வைத்தார் ஆண்டவர் கமல் ஹாசன். அவர்கள் மீண்டும் பிரிந்து வாழ்கின்றனர். குழந்தையின் வாழ்கையை கெடுப்பதாக பாலாஜி குற்றம் சுமத்தினார். நித்யாவோ அவரைபற்றியும் கமல் பற்றியும் கேவலமாக பேசினார் என்பது குறிப்பிட தக்கது.

ரச்சிதா மகாலட்சுமி – தினேஷ்: ரச்சிதா இன்னொரு விஜய் டிவி புகழ் நடிகை. இவர் பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி 2 போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானவர். கன்னடத்தை பூர்வீகமாக கொண்டவர், அதிகம் தமிழ் தொலைக்காட்சிகளில் தான் நடித்தார். உடன் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் தற்போது பிரிந்து தனித்தனியே தான் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வெகு சீக்கிரம் இவர்களும் விவாகரத்து வாங்கி விடுவார்கள் என்று கூறுகிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

செல்வராகவன் – சோனியா அகர்வால்: இயக்குனர் செல்வராகவன், சோனியா அகர்வாலை தொடர்ந்து தனது படங்களில் நடிக்கவைத்தார். அப்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்பட்டு அது சீக்கிரம் காதலாக மாறியது. திருமணம் செய்துகொண்டு சில வருடங்களே ஒன்றாக இருந்தவர்கள் சீக்கிரம் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு சோனியா ஒரு சில படங்களில் நடித்தார். ஆனாலும் பெரிதாக எதுவும் அமையவில்லை. அதே போல செல்வராகவனுக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய படம் எதுவும் இல்லை.

இயக்குனர் விஜய் – அமலா பால்: இயக்குனர் விஜய், நடிகை அமலா பாலை துரத்தி துரத்தி காதல் செய்தார். பெற்றோர் விருப்பம் காட்டாத போதும் அவர்களை வற்புறுத்தி திருமணம் செய்துகொண்டார். அமலா பால் தொடர்ந்து தனது ஆண் நண்பர்களுடனும், நடிகர் தனுஷுடன் நெருங்கிய நட்பில் இருந்த காரணத்தாலும் பிரச்சனை வெடித்து பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இயக்குனர் விஜய் தற்போது இரண்டாவது திருமணம் செய்து இன்பமாய் வாழ்கிறார். அமலா பால் இப்போதும் தனது ஆண் நண்பர்களுடன் சிறப்பாக நேரத்தை செலவிட்டு சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.