தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உச்ச நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி ஹிந்தி சினிமாவிலும் கால் பதித்து நடித்து வந்தார். ஆனால் தற்போது ஸ்ரீதேவி உயிருடன் இல்லை. இந்நிலையில் அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகையாக களமிறங்கி நடித்து வருகிறார்.

அந்த வகையில் தடாக் என்ற பாலிவுட் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் தற்போது அடுத்தடுத்த புதிய படங்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிசியான நடிகையாக மாறியுள்ளார். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கத்தில் குட் லக் ஜெர்ரி, தோஸ்தானா 2, பாம்பே கேர்ள்ஸ், ரன்பூமி, Takht உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாவிலும் மிகவும் பிசியாக வலம் வரும் ஜான்வி கபூர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அவரது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதன் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஜான்வி கபூருக்கு ரன்வீர் சிங் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி, சமீபத்தில் ரன்வீர்சிங் தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிகை ஜான்வி கபூர் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஜான்விக்கு வைத்த வினாடி வினா போட்டியில் அவர் தோற்று விட்டார். இருப்பினும், அந்த நிகழ்ச்சியிலேயே ஜான்வி கபூர் ரன்வீர் சிங்கிற்கு மேற்கத்திய நடனமான பெல்லி டான்ஸ் ஆடி காட்டியுள்ளார். ஜான்வி கபூர் பெல்லி டான்ஸ்

ஜான்வி கபூரின் பெல்லி டான்ஸை பார்த்து மெய் மறந்த ரன்வீர் சிங் தனது அடுத்த படத்தில் ஜான்வி கபூருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான்விக்கு எதிர்பாராத விதமாக பட வாய்ப்பு கிடைத்துள்ளதால், மகிழ்ச்சியில் உள்ளாராம்.