சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.  இந்த படத்திற்காக நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்ய கான் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகை அனன்யாவுக்கும் சம்பந்தம் உள்ளது என செய்திகள் வெளியாயின, இதையடுத்து தளபதி 66-ல் அனன்யாவை ஹீரோயினாக்கும் முடிவை தயாரிப்பாளர் கை விட்டதாக தெரிகிறது.

போதைப் பொருள் வளத்தைப் பற்றி எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போன்று நடிகை தெரிவித்துள்ளார். தளபதியுடன் நடிக்க ஆசைதான் ஆனாலும் படக்குழுவினர் இது சம்பந்தமாக பேசவில்லை என்று கூறி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதுபற்றி நடிகையின் தரப்பில் கேட்ட பொழுது தளபதி 66 படக்குழுவினர் எங்களை அணுகவோ, ஒப்பந்தம் செய்யவோ இல்லை என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக கீர்த்தி சுரேஷ் மற்றும் கியாரா அத்வானி போன்றோர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

படத்தின் நடிகர் நடிகைகள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் விரைவில் வெளியிடுவார் என்றும்,  ஹீரோயின் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு முதல் முறையாக இசையமைப்பாளர் தமன் இசையமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.