வாய்ப்பு தர மாட்டேன் என ஓவரா பண்ண சிவகார்த்திகேயன்.. கொக்கி போட்டு தூக்கிய தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அதனால் தற்போது பல இயக்குனர்களின் சிவகார்த்திகேயனை வைத்து படங்கள் இயக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் நெருங்கிய வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தருவதாக கூறி அனைத்து இயக்குனர்களையும் தூரத்தில் உள்ளார்.

அப்படித்தான் லைக்காவுடன் தொடர்பில் உள்ள ஒரு நபர் சிவகார்த்திகேயன் வைத்து படம் தயாரிப்பதற்கு பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் கூடிய விரைவில் இணையலாம் என கூறி நாசுக்காக மறுத்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் என்ன சும்மா இருப்பாரா தனது புத்தியை யூஸ் பண்ணி தற்போது சிவகார்த்திகேயனை மடக்கி உள்ளார்.

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான டாக்டர் படம் சொன்ன தேதி என்று வெளியிடுவதற்கு முன்பு பல பிரச்சினைகளை சந்தித்து உள்ளது. அப்போது படத்தை வெளியிட வேண்டும் என்றால் தனக்கு தரவேண்டிய 27 கோடி ரூபாய் தரவேண்டும் என கூறி தயாரிப்பாளர் ஒருவர் பிரச்சனை செய்துள்ளார்.

அப்போது சிவகார்த்திகேயனுக்கு மதுரை அன்பு 27 கோடி ரூபாய் கொடுத்து டாக்டர் படத்தை வெளியிட உதவி செய்துள்ளார். இவர் ஏற்கனவே சீமராஜா படம் வெளி வருவதற்கும் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். தற்போது இவர் பணத்திற்கு பதிலாக தனது நண்பருக்கு கால்ஷீட் கொடுக்கும் படி கேட்டுள்ளார்.

அது வேறு யாருமில்லை சிவகார்த்திகேயன் வைத்து படம் தயாரிப்பதற்கு பல முறை முயற்சி செய்த அந்த தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுக்கும் படி கூறியுள்ளார். முதலில் நாசூக்காக மறுத்த சிவகார்த்திகேயனை அவரது ஸ்டைலிலேயே நாசுக்காக அந்த தயாரிப்பாளர் வளைத்து மடக்கி உள்ளார். வேறொரு நண்பர் மூலம் பண உதவி செய்து அதன்மூலம் தனது படத்திற்கு கால்சீட் வாங்கியுள்ளார். முதலில் அமைதியாக இருந்த சிவகார்த்திகேயன் இந்த தந்திரத்தை பார்த்து அசந்து போய் உள்ளார். வேறு வழியின்றி அதே தயாரிப்பாளருக்கு கால்ஷீட் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.