வாயில் சிகரெட், கையில் கட்டு என மிரட்டும் அரவிந்த்சாமி.. டைட்டிலுடன் போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. சாக்லேட் பாயாக வலம் வந்த இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருந்தனர். இவ்வாறு உச்சத்தில் இருந்த அரவிந்த் சாமி திடீரென சினிமாவை விட்டு விலகி இருந்தார். தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து தனது இரண்டாவது இன்னிங்சை அசத்தலாக நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கிய தளபதி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அரவிந்த் சாமி அதே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தனி ஒருவன் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தையும் மீண்டும் அவர் பக்கம் திருப்பினார்.

இதனை தொடர்ந்து போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்க சிவந்த வானம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இவர் கைவசம் சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன், கள்ளபார்ட் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மலையாளத்திலும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இறுதியாக அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான தலைவி படத்தை தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் கள்ளபார்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல நடிகர் விஜய் சேதுபதி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் தான் கள்ளபார்ட். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிகை ரெஜினா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் முன்னணி நடிகர் ஆனந்த்ராஜ் நடிக்கிறார்.

இயக்குனர் ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரில் வாயில் சிகரெட்டுடன், கையில் கட்டுடன் வித்தியாசமாக தோற்றமளிக்கும் அரவிந்த் சாமியின் லுக் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சம்பள விஷயத்தில் நயன்தாராவை ஓரங்கட்டிய நடிகை.. ரெண்டு துண்டு துணியில் மொத்தமும் மாறிடுச்சி

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பாலிவுட்டில் இருந்து புது நடிகைகளை களமிறக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது புதுவரவாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இவரது முதல் ...
AllEscort