சின்னத் திரையில் நாயகியாக வலம் வரும் நடிகைகள் தற்போது வெள்ளி திரையில் நடிக்க ஆரம்பித்துள்ளனர். அதில் பிரியா பவானி சங்கர், வாணி போஜன் போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளனர்.

இது தவிர விஜய் டிவியில் பிரபலமாக இருக்கும் சில நடிகைகளும் தற்போது வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கின்றனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை யாக நடித்து வரும் காவியா நடிகர் கவினுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் தொடரில் நாயகியாக நடிப்பவர் பவித்ரா ஜனனி. இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் பவித்ராவின் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவை.

சீரியலில் கவனம் செலுத்தி வந்த பவித்ரா தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக களமிறங்க உள்ளார். பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படத்தில்தான் பவித்ரா நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் பவித்ராவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பவித்ரா நடிக்க இருக்கும் படத்தினைப் பற்றிய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. நடிகைகள் பலரும் சினிமாவில் நடிக்க தொடங்கி விட்டால் சின்னத்திரைக்கு டாட்டா காட்டி விடுவார்கள். அதேபோல் பவித்ராவும், தான் நடிக்கும் சீரியலை விட்டு விரைவில் வெளியேற அதிக வாய்ப்புள்ளது.