விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் குடும்பத்தலைவி படும் கஷ்டத்தை தத்ரூபமாக கண்முன் காண்பிக்கும் பாக்கியலட்சுமி என்ற நெடுந்தொடர் தற்போது விறுவிறுப்பாக கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கும்.

இந்த சீரியலில் தற்போது நாயகியாக உள்ள பாக்கியலட்சுமி, ஜோதிகா வெள்ளித்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்த ’36 வயதினிலே’ என்ற படத்தின் கதாநாயகி ஆகவே மாறி வருகிறார். ஏனென்றால் இந்த சீரியலில் ஆயிரம் பேருக்கு சமைத்துக் கொடுக்கும் ஆர்டரை எடுத்த பாக்கியலட்சுமி அக்கம்பக்கம் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளின் உதவியுடன் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.

இதற்காக தொழிலதிபர் ராஜசேகர் பாக்கியாவை பாராட்டுகிறார். அப்பொழுது ஜோதிகாவின் வாடி ராசாத்தி பாடல் பின்னணியில் ஒலிக்க கெத்தாக நடந்து வருகிறார் பாக்கியலட்சுமி. தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் ப்ரோமோவால் பாக்கியலட்சுமி சீரியல் இன் டிஆர்பி விறுவிறுவென்று உயர தொடங்கி உள்ளது.

எனவே இந்த எபிசோடை பார்ப்பதற்காகவே, எப்பொழுது ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் தொலைக்காட்சி முன் காத்துக்கிடக்கின்றன. மேலும் இந்த சீரியலின் மூலம் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பெண்களை ஊக்குவிக்கவும் உற்சாகப்படுத்தும் விதமாக இருப்பதால் பலரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் இந்த சீரியல் ஆனது இல்லத்தரசிகளுக்கு இஷ்டமான சீரியல் ஆகவும் மாறிவிட்டது. இந்த சீரியலில் பாக்கிலக்ஷ்மியின் கணவர் கோபி தன்னுடைய கல்லூரித் தோழி ராதிகாவுடன் பழகுவது பாக்கியாவிற்கு எப்போது தெரியவரும் என்றும் சீரியல் ரசிகர்கள் காத்துள்ளனர்.

எனவே இவ்வளவு விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்த பாக்கியலட்சுமி சீரியல் ஆனது தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.