வாங்க தம்பி நம்ம ஒரு படம் பண்ணுவோம்.. இளம் இயக்குனருடன் கூட்டணி போட்ட சூர்யா

இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது பல படங்களில் பிசியாக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தத்தினால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யாவின் 40வது திரைப்படமான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளில் நடந்து வருகிறது இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இதைத்தொடர்ந்து இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிறது வாடிவாசல் திரைப்படம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடி வாசல் திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. ஒரு காலை உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அயலான் திரைப்படம் இயக்குனரான ரவிகுமாருடன் ஒரு அறிவியல் சார்ந்த புனைகதை நாடகத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இருப்பினும் இது பற்றி அதிகாரப்பூர்வமான செய்திகள் கிடைக்கப் பெறாத நிலையில் தற்போது எதற்கும் துணிந்தவன் வாடிவாசல் போன்ற திரைப்படங்களை அதிகார அறிவிப்பாக உள்ளது. மேலும் ரவிக்குமாரின் திரைப்பட ஆரம்ப வேலைகள் தொடங்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது.