வலிமை வெற்றிக்காக ரசிகர்கள் செய்த செயல்.. தலைவன் எவ்வழியோ ரசிகர்கள் அவ்வழி.!

தல அஜித்தின் 60வது படம் வலிமை, நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனிகபூர் இப்படத்தை ஜீ ஸ்டுடியோ உடன் சேர்ந்து தயாரித்து வருகிறார். வலிமை படம் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை தொடர்ந்து வலிமை படத்தையும் இயக்குகிறார் எச்.வினோத். அஜித்துக்கு ஜோடியாக இப்படத்தில் ஹூமா குரேஷி  நடித்துள்ளார். இவர் சூப்பர் ஸ்டாரின் காலா திரைப்படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்து இருப்பார்.

இப்படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேய நடிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு நிரவ் ஷா வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

வலிமை திரைப்படம் 2022 இல் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை போனிகபூர் அறிவித்தார். இந்த அறிவிப்பு தல அஜித் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தல ரசிகர்கள் தற்போது 50,000 மேற்பட்ட பனை மரங்களை நடவு செய்த பனைமர காதலர்கள் என்ற அமைப்புடன் 10,000 பனை விதைகளை வலிமை படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பனை விதைகளை நடவு செய்துள்ளனர். தல ரசிகர்கள் மரம் நடுதல் போன்ற நல்ல விஷயங்களை செய்வது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.