வலிமை ரிலீஸ் தேதியை வெளியிட்ட போனி கபூர்.. மற்ற படங்களுக்கு பீதியை கிளப்பிய அப்டேட்.!

அஜித் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளிவந்த நேர்கொண்டபார்வை படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்காக ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் சிங்கிள் அப்டேட்டிற்காக ஒவ்வொரு நாளும் ஏங்கி வந்த நிலையில் அதிரடியாக படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது.

இருப்பினும் படம் எப்போது வெளியாகும் என்பதை ரசிகர்கள் அனைவரின் ஒரே கேள்வியாக உள்ளது. வலிமை படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனவே விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் குறித்த தகவல்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், திடீரென தயாரிப்பு தரப்பில் வலிமை படம் பொங்கலுக்கு வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொங்கலுக்கு ஏற்கனவே விஜய்யின் பீஸ்ட் படம் வெளிவரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது வலிமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

படம் வெளிவருவதற்குள் 100% தியேட்டர்கள் திறக்கப்பட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் திரையரங்கை நிரப்பி விடுவார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. தற்போது வலிமை படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

அஜித் பட தயாரிப்பாளருடன் கூட்டணி போட்ட RJ பாலாஜி.. 45 நாளில் ஷூட்டிங் முடிக்க கட்டளை.!

ரேடியோ ஜாக்கியாக இருந்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக மாறியவர் தான் ஆர்.ஜே.பாலாஜி. ஆரம்ப காலத்தில் காமெடி நடிகராக மட்டுமே நடித்து வந்த ஆர்.ஜே.பாலாஜிக்கும் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது போல. ...