அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் தான் வலிமை. இப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வருவதால், படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இறுதியாக இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெளியாக உள்ளதால், அஜித் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டை திருவிழா போல் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஒரு தியேட்டர் ஒன்றும் கொண்டாட்டத்தில் பங்கு வகிக்க உள்ளதாம்.

சென்னையில் உள்ள பிரபல தியேட்டரான ரோகிணி தியேட்டர் வலிமை படத்தின் வெளியீட்டை சிறப்பாக கொண்டாட உள்ளதாம். ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் அஜித் படம் வெளியாவதால் நிச்சயம் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

எனவே தியேட்டரில் இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்களாம். அதன்படி தற்போது வரை 14,000 இருக்கைகள் உள்ள நிலையில் மேலும் 2000 இருக்கைகளை அதிகரித்து 16,000 இருக்கைகளாக உயர்த்த உள்ளார்களாம். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 16ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனையாகும்.

வலிமை படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே இந்த திட்டத்தை செயல்படுத்தி புதிய சாதனை படைக்க முடிவு செய்துள்ளார்களாம். ரோகிணி தியேட்டரின் இந்த அதிரடி முடிவால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தங்கள் பேவரைட் ஹீரோவின் படத்தை முதல் பார்க்க முடியாமல் போய்விடுமோ என பயந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

அப்போ வலிமை படம் வெளியாகும் போது சிறப்பான தரமான பல சம்பவங்கள் காத்திருக்கும் போல.. இதுதான் அஜித் ரசிகர்களுக்கு நிஜமான தல தீபாவளியாக இருக்க போகிறது.