வலிமை மனக்கசப்பால் வந்த விபரீதம்.. அஜித்தை இயக்கப் போகும் பழைய ஹிட் இயக்குனர்

வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவராமல் அஜித்தின் வழக்கமான படங்களின் சாயலும் இல்லாமல் தொடர்ந்து ஆக்சன் காட்சிகள் தேவையில்லாத சென்டிமென்ட் காட்சிகள் என்று படம் தோல்வியை சந்தித்து விட்டது. இதுகுறித்து வினோத் தரப்பிலிருந்தும், அஜித் தரப்பிலிருந்தும் எந்தவிதமான விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக இயக்குனர் வினோத் மீதும் நடிகர் அஜித் மீதும் கோபத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள். படத்தின் நீளம் தான் படத்தை கெடுத்து விட்டது என்றும், 14 நிமிட தேவை இல்லாத காட்சிகளை படத்திலிருந்து நீக்கியும், இன்று ரிலீஸ் செய்து இருக்கிறது. இப்படி இருக்கையில் அஜித்தின் அடுத்த படமும் இதே கூட்டணிதான் தொடரும் என்றும், மீண்டும் அஜித் , H. வினோத் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்றும், அந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது அஜித்தின் வலிமை படத்தின் ரிசல்ட்டை பார்த்துவிட்டு அந்த முடிவை குழிதோண்டி புதைத்து விட்டாராம் அஜித். ஒரு வாட்டி பட்டதே போதும் என தனது முடிவை மாற்றிக்கொண்டார். சரி அப்போ அஜித் யாருடன் அடுத்த படத்தில் இணைய போகிறார் என்ற கேள்விகள் இப்போது கோடம்பாக்கத்தில் கிசு கிசுக்க ஆரம்பித்து விட்டனர். அப்போதுதான் அஜித்தை வைத்து பில்லா என்ற வெற்றிப்படத்தை கொடுத்த விஷ்ணுவர்தனின் ஞாபகம் வந்தது அஜித்திற்கு பில்லா படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து பலமுறை என்னிடம் கதை இருப்பதாகவும் அதை அஜித் கேட்க வேண்டும் என்றும் போராடிக் கொண்டிருக்கிறார்.

பில்லா படம் போல அஜித்திற்கு ஒரு ஸ்டைலான சூப்பர் ஹிட் திரைப்படம் கொடுக்க வேண்டும் என்றும் அப்படி ஒரு கதை தன்னிடம் இருப்பதாகவும் விஷ்ணுவர்த்தன் கூறி வந்த நிலையில் அஜித் பல காரணங்களால் அவரை ஒதுக்கி வந்தார். தற்போது ஏரி உடைந்தால் ஏரியாவிற்கு மீன் வந்துதான் ஆகவேண்டும் என்பது போல தற்போது அஜித் குமார் மீண்டும் விஷ்ணுவர்தனின் தயவை நோக்கி சென்றிருக்கிறார்.

கடந்த 2009ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் அஜித்தின் கேரியரில் அவரின் இமேஜை கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஒரு படமாக இருந்தது. அந்த படம் அந்த அளவிற்கு வெற்றியாகும் என்று எவரும் எண்ணிப் பார்க்கவில்லை. அந்த வெற்றிக்குப் பிறகு அப்படி ஒரு வெற்றியை அஜித் அவர்கள் இன்றுவரை பதிவு செய்யவில்லை

அப்படி ஒரு படத்தை மீண்டும் கொடுத்து ரசிகர்களை அஜித் சமாதானப்படுத்த வேண்டும். இப்படி இருக்கும்போது வலிமை படத்தால் அஜித் மற்றும் வினோத் இடையே ஏற்பட்ட மனகசப்பு அவரின் அடுத்த பட வாய்ப்பை வினோத்திடம் இருந்து பறித்து விட்டது. இருந்தாலும் அஜித் தேர்வு செய்த கதைதான் இந்த வலிமை திரைப்படம். அப்போதே சுதாரித்து இருக்கலாமே, இரண்டு வருடம் காத்திருந்த போது கூட படத்தை பார்க்கவில்லையா அஜித் என ரசிகர்கள் ஒரு பக்கம் அஜித்தையும் வறுத்து எடுத்து கொண்டுதான் இருக்கின்றனர்.