வலிமை படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.? பக்காவா பிளான் போட்ட போனி கபூர்!

தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் இரண்டாவது முறையாக மிகவும் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்தது. முன்னதாக வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கிட்டத்தட்ட படம் தொடங்கி இரண்டு வருடங்கள் கழித்து கடந்த வாரம் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்வித்தது.

ஆனால் மற்ற ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் சங்கர் ராஜாவின் தீம் மியூசிக்கும் ஏற்கனவே அவர் பணியாற்றிய படத்திலிருந்து உருவப்பட்டது தான் என்ற செய்தி அஜித் ரசிகர்களை கொஞ்சம் கவலையில் ஆழ்த்தியது.

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்திற்கு ஆரம்பத்திலேயே சின்ன சின்ன விமர்சனங்கள் வந்துள்ளது படக்குழுவினரை கொஞ்சம் அப்செட்டில் வைத்துள்ளது. இருந்தாலும் அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

நவம்பர் தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படம் வருவதால் அந்த படத்தின் வெளியீட்டுக்கு பிறகு இரண்டு வாரங்கள் கழித்து வலிமை படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இருந்தாலும் காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

ஆகையால் போட்டி எதுவுமின்றி கல்லாவை கச்சிதமாக நிரப்பும் ஐடியாவில் வலிமை படத்தை கிறிஸ்துமஸை ஒட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் கிறிஸ்மஸ் சனிக்கிழமை வருவதால் அஜித்துக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் வெளியிட வேண்டும் என்பதற்காக டிசம்பர் 23-ஆம் தேதி வலிமை படம் ரிலீஸ் ஆகலாம் என்று தகவல்கள் கசிகிறது.

மேலும் கிறிஸ்மஸ் முதல் பொங்கல் வரை வலிமை, வசூல் வேட்டையாடும் என்பதற்காகவே இவ்வாறு ரிலீஸ் செய்யப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை வலிமை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சிமா மோகனுக்கு நடந்த பெரும் சோகம்.. எல்லாம் அவரால் வந்த வினை

மலையாள திரையுலகில் இருந்து தமிழுக்கு நடிக்க வந்தவர் நடிகை மஞ்சிமா மோகன். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் திரைப்படத்தில் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் மூலம் இவருக்கு ...