வலிமை படத்தால் போனி கபூர் கழுத்தை புடிக்கும் விநியோகஸ்தர்கள்.. நாங்க காசு பாக்க வேண்டாமா.?

இரண்டு ஆண்டுகளின் வெறித்தனமான காத்திருப்புக்குப் பிறகு பிப்ரவரி 24ஆம் தேதி அதாவது இன்னும் இரண்டு நாட்களில் வலிமை திரைப்படம் வெளியாக இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் வலிமை படத்தைப் பற்றிதான் தற்போது சமூக வலைதளப்பக்கங்களின் மிகப்பெரிய பேச்சாக இருக்கிறது. படத்தை முதல்நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்களும் சினிமா வட்டாரங்களிலும் வெகுவாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்படி இருக்கக் கூடிய இந்த நேரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வலிமை திரைப்பட படக்குழுவிடம் இருந்து கிடைத்திருக்கிறது. ரசிகர்களைப் போலவே படக்குழுவும் இந்த படத்தை எப்போது வெளியிடப் போகிறோம் ரசிகர்களின் காத்திருப்பிற்கு எப்போது விருந்து அளிக்கப் போகிறோம் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் படம் அனைத்து இடங்களிலும் விநியோகிக்கப்பட்டு பிப்ரவரி 24ஆம் தேதி அன்று காலை படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளின் முன்பாக தங்களது விருப்ப பேனர்களை அமைத்து வருகின்றனர். இந்த சமயத்தில் இந்த படத்தை விநியோகம் செய்யும் இடத்திலிருந்து பிரச்சனை படக்குழுவிற்கு வர ஆரம்பித்திருக்கிறது. எப்போதும் பெரிய படங்கள் வரும்போது நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் ஒரு ஒப்பந்த அடிப்படையில் தான் அந்த படம் வெளியாகும் . எவ்வளவுதான் சமரசம் பேசினாலும் அங்கு எப்போதும் சிக்கல்களும்,பிடுங்கல்களும் இருக்கத்தான் செய்யும். அதே போல தான் தற்போது வலிமை படத்திற்கும் வந்திருக்கிறது.

வலிமை படத்தை ரிலீஸ் செய்யக் கூடிய விநியோகஸ்தர்களில் ஒருவரான பன்னீர்செல்வம் இந்த வலிமை படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி , சரியாக 15 நாட்களில் ஓடிடியில் வெளியாகிவிடும். அப்படி இருக்கையில் நாங்கள் எப்படி லாபம் சம்பாதிப்பது .இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் எங்களுக்கு பல சலுகைகள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆனால் போனிகபூர் தரப்பில் படம் ரிலீசாகி 21 நாட்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாகும். அதுவரை ஓடிடியில் வெளியாவதற்கு வாய்ப்பில்லை என்று போனிகபூர் தெரிவித்திருக்கிறார், இதனால் தேவையில்லாமல் விநியோகஸ்தர்கள் பயப்படவேண்டாம் என்றும் படத்தின் லாபத்தில் எந்த குறையும் இருக்காது என்றும் அவர் கூறியிருக்கிறார் .

படம் வெள்ளித்திரைக்கான படம் என்றாலும் படத்தை ஓடிடியில் பார்க்கும் மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர் . அவர்களுக்கு படம் தியேட்டரில் வந்தாலும் சரி, ஓடிடியில் வந்தாலும் வீட்டில் ஜம்மென்று அமர்ந்து கொண்டு ஓடிடியில் பார்த்து லாபம் அடையலாம் என்றும் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படி பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் ஒரு படம் வெளியாகிறது. போனிகபூர் போன்ற மிகப்பெரிய தயாரிப்பாளர்களுக்கே இதுபோன்ற சிக்கல்கள் இருக்கும் போது சிறிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.