வலிமை செய்த புதிய சாதனை.. அடேங்கப்பா.! படம் வருவதற்கு முன்பே போனி பண்ணும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் வினோத். இவரது முதல் படமே வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்திருந்ததால், ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படம் பட்டிதொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

காவல்துறை அதிகாரியாக நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்திருந்தது. இவ்விரு படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் தல அஜித்துடன் கூட்டணி அமைத்த படம்தான் நேர்கொண்ட பார்வை. ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படம் ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது.

இதனையடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக நடிகர் அஜித்துடன் வினோத் கூட்டணி அமைத்துள்ள படம் தான் வலிமை. இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்துக்கொண்டிருக்கின்றனர். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் நாங்க வேற மாறி பாடல் யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான நாங்க வேற மாரி பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இப்பாடல் யூடிப்பில் சுமார் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. விக்னேஷ் சிவன் வரிகளில், யுவன் இசையில் வெளியான இப்பாடல் படைத்துள்ள புதிய சாதனையை #NaangaVeraMaariHits 25m என்ற ஹேஸ்டாக்கை டிரெண்ட் செய்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த வீடியோவை வெளியிட்டே வியாபாரத்தை பெருக்கி விட்டாராம் போனி கபூர். இந்த வீடியோ வெளியான நேரம் தியேட்டர் விற்பனையும் அதிகாமாகி விட்டதாம். இந்த மகிழ்ச்சியான செய்தியை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவில் 10 கோடி ரசிகர்களை கையில் வைத்துள்ள ஒரே வெப் சீரிஸ்.. ஒரு சீசன் பார்த்தா கூட நீங்க அடிமை ஆயிடுவீங்க.!

மணி ஹெய்ஸ்ட் என்ற ஸ்பானிஷ் வெப் சீரிஸ் இன்று உலகம் முழுக்க டிரெண்டிங் ஆக உள்ளது. ஸ்பானிஷ் மொழியில் La casa de papel எனும் பெயரில் வெளிவந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை வாங்கிய நெட்ப்ளிக்ஸ் ...