அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. சமீபகாலமாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து இணையதளங்களில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு வந்தனர்.

அதனால் படக்குழு அவ்வப்போது ஒரு சில அப்டேட்களை வெளியிட்டு வந்தது. சமீபத்தில் கூட வலிமை படத்தின் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டது. இதனை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டாடி மகிழ்ந்தனர்.

வலிமை படம் எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் முதலில் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆனால் அப்போது அண்ணாத்த படமும் வெளியாக இருப்பதால் என்ன செய்வது என தெரியாமல் காத்திருந்து உள்ளனர். அதாவது அஜித் குமார் இயக்குனர் சிவாவும் நெருங்கிய நண்பர்கள். இயக்குனர் சிவா அண்ணாத்த திரைப்படத்தை இயக்கிக் கொண்டு இருந்தாலும் அவ்வப்போது அஜித்குமார் மற்றும் சிவா இருவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு படத்தினைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள்.

அப்படி பேசும்போது இயக்குனர் சிவா சார் என்னுடைய படம் வெளியாகும் போது உங்களுடைய படம் வெளியாகிறது என கேட்டுள்ளார். மேலும் கொஞ்ச நாள் தள்ளி வெளியான நல்லா இருக்கும் என கூறியுள்ளார். இதனால் அஜித் குமார் வலிமை படத்தை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளார்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று படத்தை வெளியிடாமல் பொங்கலுக்கு வெளியிடுவதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு பலரும் தீபாவளி அன்று அண்ணாத்த படம் வெளிவருவதால் வலிமை படத்தை வெளியிட வில்லை. ஆனால் கிறிஸ்மஸ் தினத்தன்று ஏன் படத்தை வெளியிடவில்லை என கேட்டு வந்தனர்.

தற்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று படத்தை வெளியிடாமல் இருப்பதற்கு காரணம் கிறிஸ்துமஸ் தினத்தை பெரிய அளவில் யாரும் தமிழ்நாட்டில்  கொண்டாடுவதில்லை. அதனால் படத்தை வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என பலரும் கூறியுள்ளனர். மேலும் வலிமை படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை 58 கோடிக்கு மதுரை அன்பு வாங்கியுள்ளார். தீபாவளி அன்று படத்தை வெளியிட்டால் முன்பு பேசியது போல 58 கோடிக்கு நான் வாங்கிக் கொள்கிறேன் என அன்பு சொல்லி இருக்கிறார்.

மேலும் கிறிஸ்மஸ் தினத்தன்று படத்தை வெளியிட்டால் 5 கோடி குறைக்க வேண்டும் என அன்பு கூறியுள்ளார். இல்லை என்றால் பொங்கல் தினத்தன்று படத்தை வெளியிட்டால் சொன்னபடியே படத்தை 58 கோடிக்கு வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். இதனால் தான் வலிமை படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.