வலிமையின் 10 நாள் சாதனையை ஐந்தே நாளில் முறியடித்த பீஸ்ட்.. மனசை தேத்திக்கொண்ட நெல்சன்

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது அதுவும் விஜய்காக மட்டுமே ஏராளமான ரசிகர்கள் படத்தை பார்த்து வருகின்றனர்.

விஜய்க்கு 40 வயதுக்கு மேலாகியும் தற்போது வரை நடனத்தில் அவரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை எனவும் கூறி வருகின்றனர். அதாவது தென்னிந்திய சினிமாவில் நடனத்தில் விஜய்தான் நம்பர் ஒன் இவ்வளவு வயதாகியும் தற்போது வரை நடனத்தில் பிச்சு உதறுகிறார் எனவும் கூறி வருகின்றனர்.

வலிமை திரைப்படம் மூன்று நாட்களில் 100 கோடியை வசூல் சாதனை படைத்தது. அதன்பிறகு படத்திற்கு பெரிய அளவு வரவேற்பு இல்லாததால் 10 நாள் கழித்து தான் 200 கோடி என்ற வசூல் சாதனையை படைத்தது. ஆனால் பீஸ்ட் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும் 5 நாட்களில் 200கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை என்றால் அது விஜய்தான் படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ விஜய் உடைய மார்க்கெட் என்றுமே சரிந்ததில்லை என கூறி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பீஸ்ட் ரிலீஸ் ஆன அடுத்த நாளே ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 திரைப்படமும், பீஸ்ட்-க்கு போட்டியாக திரையரங்கில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையிலும் பீஸ்ட் திரைப்படத்தின் 5 நாளில் வசூல் சாதனை 200 கோடி என்று விஷயம் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அத்துடன் தளபதி ரசிகர்களும் இதுவரை விஜய்யின் எந்தப் படத்தையும் சோடை போக விடாமல் திரையரங்கில் ஆரவாரத்துடன் பார்ப்பதால்தான் இந்த வசூல் சாதனை எல்லாம் சாத்தியமாகிறது.