விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து 5வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு காதல் பிக் பாஸ் வீட்டில் மலர்வதுண்டு.

ஆனால் ஒரு மாதத்தைக் கடந்த பிக் பாஸ் சீசன்5இல் மட்டும் இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த காதல் ஜோடியும் சேரவில்லை. ஆனால் பிக் பாஸ் எடிட்டர்ஸ் வருண் மற்றும் அக்ஷரா இருவரையும் டார்கெட் செய்து காதல் டிராக்கை ஓட விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் அக்ஷரா பேசும்போது எல்லாம் வருணுக்கு க்ளோசப் வைக்கின்றனர். அதேபோன்றுதான் வருண் பேசும்போதெல்லாம் அக்ஷராவை தனியாக காட்டுகின்றனர். இவ்வாறு நேற்று கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்ஷரா பாடும்போது வருண் மெய்மறந்து கேட்பதை பிக் பாஸ் எடிட்டர்ஸ் கச்சிதமாக ரசிகர்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்தனர்.

இதையெல்லாம் உன்னிப்பாக கவனித்த நெட்டிசன்கள் அக்ஷரா மற்றும் வருண் இருவருக்கும் பிக் பாஸ் எடிட்டர் எவ்வாறு பின்புலத்தில் வேலை செய்துள்ளனர் என்பதை இணையத்தில் வீடியோ போட்டு கழுவி ஊற்றுகின்றனர்.

இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் காதல் மலர்ந்தால் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு இன்னும் சுவாரசியமாக இருக்கும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பு. கடந்த சீசனில் பார்த்த காதல் காட்சிகள் போன்று தற்போது உள்ள 5வது சீசனில் ஒன்றுமே இல்லை என்பது சற்று வருத்தமாக தான் உள்ளது. வருண், அக்ஷரா செம்ம லவ்