வன்முறையை தூண்டிய பயில்வான்.. புகார் அளித்த பிரபலம்

பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனல் நடத்தி அதன் மூலம் நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களையும், ஆபாசமாகவும் பேசி வருகிறார். இதற்கு திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனாலும் பயில்வான் மீது புகார் கொடுக்க யாரும் முன்வரவில்லை.

இதனால் பயில்வான் துளிர்விட்டு போயி தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். சமீபத்தில் ராதிகாவின் அம்மாவைப் பற்றியும் தவறாக பேசியிருந்த பயல்வானுக்கு ராதிகா தக்க பதிலடி கொடுத்தார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத பயில்வான் இதையும் ஒரு வீடியோவாக போட்டிருந்தார்.

இதனாலேயே இவருடைய யூடியூப் சேனலை பல லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஆனால் தற்போது தயாரிப்பாளர் கே ராஜன் பயில்வான் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நடிகர், நடிகைகளுக்கு எதிராக ரகசியங்களை வெளியிடுவதாக என்று சொல்லி பொய்யான செய்திகளை பரப்பி வருகிறார்.

இதனால் நடிகர், நடிகைகள் மிகவும் மன உளைச்சலும், வேதனையும் ஏற்பட்ட கஷ்டப்பட்ட வருகின்றனர். அதையெல்லாம் பயில்வான் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் தொடர்ந்து இந்த மாதிரி கேவலமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பயில்வான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.

என்னை யாராவது தாக்க வந்தால் அவர்களை அரிவாளால் கழுத்தை அறுத்துவிடுவேன் நான் தூத்துக்குடிகாரன் என மிரட்டி இருந்தார். அவருடைய பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக உள்ளது. ஆனால் பயில்வானால் பாதிக்கப்பட்ட நடிகர், நடிகைகள் அவர் மீது புகார் கொடுக்க பயப்படுகிறார்கள்.

இதனால்தான் நாங்கள் தற்போது கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்துள்ளோம் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். மேலும் பயில்வான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் போலீஸ், பயில்வான் மீது ஏதும் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.