90களில் கொடிகட்டி பறந்த நடிகர் தான் ராமராஜன், இவர் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றன. ஒரு சமயத்தில் ரஜினி, கமலுக்கே டப் கொடுத்த நடிகர் தான் ராமராஜன்.

இப்படி கொடி கட்டி பறந்த ராமராஜன் பின்னர் சினிமாவில் இருந்து விலகி வாழ்ந்து வந்தார். என்னதான் அவர் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் அவரை அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. அந்தளவிற்கு அவர் மக்கள் மத்தியில் பிரபலமாவார்.

படங்களில் நடிக்காமல் விலகி இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவ்வப்போது வதந்திகள் வருவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வதந்திகள் ராமராஜனையும் விட்டு வைக்கவில்லை. ஆம் சமீபத்தில் நடிகர் ராமராஜனின் உடல்நிலை மோசமாக உளள்தாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராமராஜன் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, “இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். வரலாற்றுச் சரித்திரம் படைத்த கரகாட்டம் படத்தைப்போல் ராமராஜன் 100 வருடத்துக்கு மேல் நலமோடு இருப்பார்.

மக்கள் நாயகன் ராமராஜன் பற்றி தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். ராமராஜன் பூரண நலத்துடன் இருக்கிறார். அடுத்ததாக அவர் 2 படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்பது தான் உண்மை. ராமராஜன் அவர்கள் உடல் நலத்துடனும் மன வலிமையுடனும் நன்றாக இருக்கிறார். அவர் நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் கூடிய விரைவில் வெளியாகும்” என குறிப்பிட்டுள்ளனர்.