வட சென்னை படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா.. நல்லவேளை தனுஷ், அமீரை போட்டாங்க

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்து வெளியான திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் வடசென்னை பகுதியில் உள்ள மக்களின் 35 ஆண்டுகால வாழ்க்கை பற்றி எடுக்கப்பட்டுள்ளது.

வடசென்னை படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்து இருந்தாலும் வசூலை வாரி குவித்தது. இப்படத்தில் அதிக ஆதிக்கம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் ராஜன். இந்த ராஜன் கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் நடித்திருந்தார். வடசென்னையில் நடக்கும் அனைத்திற்கும் ராஜன் தான் காரணம்.

இப்படத்தில் கேரம் வீரராக தனுஷ் அன்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சண்டை, கொலை, ரத்தம் என வடசென்னையின் அடையாளத்தை அப்படியே இந்தப் படம் பிரதிபலித்தது. ஒரே பாகத்தில் சொல்லிவிட முடியாத இந்த கதையை அழகாக திரைக்கதை அமைத்திருந்தார் வெற்றிமாறன்.

இப்படத்தில் அன்பு கதாபாத்திரம் தான் மையமாக இருந்தாலும் ராஜன் கதாபாத்திரம்தான் இக்கதை உருவாக ஆரம்பம். முதலில் ராஜன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தாராம். அதன்பின் ஒரு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக இயக்குனர் அமீர் நடித்திருந்தார்.

அதேபோல் தனுஷ் நடித்த அன்பு கதாபாத்திரத்தில் முதலில் ஜீவா நடிப்பதாக இருந்தது. ஆனால் தனுஷுக்கு வடசென்னை கதை பிடித்துப்போக இப்படத்தை தயாரித்து, நடித்து இருந்தார். வடசென்னை படத்திற்கு முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

அதேபோல் வடசென்னை படத்திலும் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி ஸ்கோர் அடித்திருந்தது. ஒருவேளை ஜீவா, விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் நடித்திருந்தால் இந்த அளவுக்கு படம் வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஏனென்றால் அந்த அளவிற்கு அமீர் மற்றும் தனுஷ் இருவரும் ராஜன், அன்பு கதாபாத்திரங்களில் ஒன்றிப் போய் இருந்தார்கள்.