வடிவேல் பாலாஜிக்கு நடந்தது தான் எனக்கும்.. பதைபதைக்கும் நிகழ்வுகளை கூறிய விஜய்டிவி பிரபலம்!

விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது இது எது’ என்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலமும், கலக்கப்போவது யாரு? போன்ற நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் காமெடி நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்தவர்தான் அமுதவாணன். இவர் ஜோடி என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் கால்பதித்த அமுதவாணன், எதிர்பார்த்த அளவிற்கு அவரால் முன்னேற முடியவில்லை.இதற்கு முக்கிய காரணம் என்ன என்பதைப் பற்றி தற்போது பேட்டி ஒன்றின் மூலம் எமோஷனலாக கூறியுள்ளார்.

ஒரு காலகட்டத்தில் சினிமாவிற்கும் டிவிக்கும் டேட் கொடுக்க முடியாமல், டைம் மேனேஜ்மென்ட் செய்யத் தவறியதால் தான் நிறையப் பிரச்சினைகள் வந்ததாக அமுதவாணன் நினைக்கிறார். இதைப்போல் டிவியில் வரும் போது மக்களிடம் எளிதாக பிரபலமான அமுதவாணன், சினிமாவில் நடிப்பதை பல நேரங்களில் எளிதாகி எடிட் செய்து விடுகின்றனர்.

ஏனென்றால் அங்கு ஒரு பெரிய அரசியலே நடந்து கொண்டிருக்கிறது. சின்ன சின்ன நடிகர்கள் எளிதில் வளர்ந்து விடக்கூடாது என்பதே சிலருடைய குறிக்கோளாக உள்ளது. இதுதான் வடிவேல் பாலாஜி நடந்துள்ளது. வடிவேல் பாலாஜி இறப்பிற்கு முக்கிய காரணம் டிப்ரஷன் தான் என்றும், தானும் அதே பிரச்சினையை சந்தித்துக் கொண்டுள்ளதாகவும் அமுதவாணன் கூறியுள்ளார்.

amudhavanan-MyThirai

அதுமட்டுமில்லாமல் சினிமாவில் நினைத்த இடத்திற்கு செல்ல முடியாததால் மனம் வெறுத்து பல வருடங்களாக தற்கொலை செய்து கொள்ள அடிக்கடி தூண்டுகிறது. அப்போதெல்லாம் இன்று ஒரு நாள் போகட்டும், ஒரு வாரம் போகட்டும், ஒரு மாதம் பார்ப்போம் என்று தன்னைத் தானே தேற்றிக்கொண்டுள்ளார் அமுதவாணன்.

இப்படியே கடந்த நான்கு வருடங்களில் ஓட்டிவிட்டார். கூடிய விரைவில் அமுதவாணன் ரீ என்ட்ரி கொடுப்பதற்காக தக்க சமயத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டுள்ளாராம். இவருடைய இந்த மனம் திறந்த பேட்டி ரசிகர்களை பதைபதைக்க வைத்துள்ளது.