வடிவேலு வருகையால் பறிபோகும் பட வாய்ப்புகள்.. பலரின் கல்லா பொட்டியில் கை வைத்த வைகைபுயல்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் வடிவேலு. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. அதனால் பல இயக்குனர்களும் வடிவேலுவை வைத்து படங்களை இயக்கினார்.

வடிவேலு காமெடியனாக பல படங்கள் நடித்துள்ளார். ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் என காமெடி காட்சிகள் இன்று வரை ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றன. வடிவேலு 23ஆம் புலிகேசி எனும் படத்தில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார்.

அதன்பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பின்பு 24ம் புலிகேசி எனும் படத்தில் மீண்டும் நடித்துக்கொண்டிருந்தார். இப்படத்தில் நடிக்கும் போது வடிவேலுவுக்கும் ஷங்கருக்கும் இடையே ஒரு சில மோதல்ஏற்பட்டது. இதனால் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என வடிவேலு கூறினார்.

இதனால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க முடியாத அளவிற்கு தயாரிப்பு சங்கம் நடவடிக்கை எடுத்தது. தற்போது பேச்சுவார்த்தை முறையில் இப்பிரச்சினை முடிக்கப்பட்டது. அதனால் தற்போது மீண்டும் வடிவேலு படத்தில் நடித்து வருகிறார்.

வடிவேலு நடிக்காமல் இருந்ததால் தான் சதீஷ், சூரி மற்றும் யோகிபாபு போன்ற பல காமெடி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தனர். தற்போது மீண்டும் வடிவேலு நடிக்க ஆரம்பித்ததால் இனிமேல் மற்ற காமெடி நடிகர்களுக்கு வாய்ப்பு வராது என கூறி வருகின்றனர்.

மேலும் வடிவேலு போல் எந்த காமெடி நடிகராலும் நடிக்க முடியாது. அதனால் இனிமேல் அனைத்து படங்களிலும் வடிவேலு தான் நடிப்பார் எனவும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். தற்போது வடிவேலு மீண்டும் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.