பல பிரச்சனைகளை சந்தித்த முன்னணி காமெடி நடிகர் வடிவேலு தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். முன்னதாக இப்படத்திற்கு நாய் சேகர் என தலைப்பு வைக்க இருந்தனர். ஆனால் அந்த தலைப்பை நடிகர் சதீஷ் படத்திற்கு வைத்து விட்டதால், தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என வைக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்.

இப்படத்தில் நடிகர் வடிவேலுவிற்கு ஜோடியே கிடையாதாம். ஆனால் வடிவேலுவிற்கு இணையான ஒரு வெயிட்டான பெண் கதாபாத்திரம் உள்ளதாம். எனவே இந்த கதாபாத்திரத்திற்காக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பலரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். லைகா இப்படத்தை தயாரிப்பதால், எப்படியும் நடிகைகள் சம்மதம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்த்த படக்குழுவினருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வடிவேலுவுடன் இணைந்து நடிக்க சில முன்னணி நடிகைகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியை தழுவியதாம். அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை பிரியா பவானி சங்கரிடம் வடிவேலு படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

ஆனால், அம்மணி தற்போது ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வருவதால், கால்ஷீட் பிரச்சனை இருப்பதாக கூறி இப்போதைக்கு புதிய படத்தில் கமீட்டாக முடியாது என்று கூறி எஸ்கேப்பாகி விட்டாராம் பிரியா பவானி சங்கர்.இதனை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதால், இவரும் இப்படத்தில் நடிக்க மறுத்து விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது. வடிவேலுவுடன் நடித்தால் எங்கே மார்க்கெட் குறைந்து விடுமோ என நடிகைகள் அச்சமடைந்து தவிர்த்து வருவதாக தெரிகிறது.