வடிவேலு, சிங்கமுத்து இடையில் வெடித்த பிரச்சினை.. அப்படியே அலேக்காக தூக்கிய வருமானவரி துறையினர்

வடிவேலு ஒரு காலத்தில் ஹீரோவுக்கு இணையாக காத்திருந்த இயக்குனர்கள் ஏராளம் என்றுதான் கூறவேண்டும். அந்த அளவிற்கு பல இயக்குனர்கள் வரிசையில் நின்று வடிவேலுவிடம் கால்ஷீட் வாங்கி உள்ளனர்.

வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரும் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளனர். பகவதி, மதுர, கிரி மற்றும் 23ஆம் புலிகேசி போன்ற படங்களில் ஒன்றாக காமெடி காட்சியில் நடித்துள்ளனர். பல படங்களில் இணைந்து பணியாற்றியவர்கள் இவர்கள் அதன் பிறகு நட்பு ரீதியாகவும் பழகியுள்ளனர்.

வடிவேலுவின் சொத்துக்களை விற்பது வாங்குவது எனஅனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார் சிங்கமுத்து. ஒரு நிலத்தை வாங்குவது என்றால் அந்த நிலத்திற்கான பேச்சுவார்த்தை முதற்கொண்டு அனைத்தையும் முடித்துவிட்டு வடிவேலுவிடம் பணத்தை மட்டும் வாங்கி அந்த நிலத்தை வடிவேலு பெயரில் வாங்கி கொடுப்பார். அந்த அளவிற்கு வடிவேலு சிங்கமுத்து மீது நம்பிக்கை வைத்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் வடிவேலுவின் நிலங்களை வாங்குவதும் விற்பதும் சிங்கமுத்து வேலையாகவே இருந்துள்ளது. இதனால் வடிவேலுவிடம் நெருக்கமாக பழகிய சிங்கமுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்ற தொடங்கியதாக தெரிகிறது. அதாவது 20 லட்சத்திற்கும் நிலம் வாங்கினால் வடிவேலுவிடம் 50 லட்சம் வாங்குவது என ஏமாற்று வேலைகளை செய்துள்ளார்.

ஆனால் இறுதியாக வருமான துறையினர் வடிவேலுவிடம் இத்தனை நாள் ஏன் வரி கட்டாமல் இருக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். அப்போதுதான் வடிவேலுவுக்கு வருமான வரி கட்டாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை சிங்கமுத்து இடம் கேட்டுள்ளார். ஆனால் சிங்கமுத்து சரியான பதில் அளிக்காததால் இவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகுதான் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர் என கூறிவருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு படத்தில் காட்டுத்தனமா நடிக்கும் சிம்பு.. கையில் கட்டுடன் வெளிவந்த அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் இளம் நடிகரான சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு மற்றும் மஹா ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதுதவிர இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் என்ற ...
AllEscort