வசூல் வேட்டையில் தளபதியை பின்னுக்குத் தள்ளிய சிவகார்த்திகேயன்.. அதிர்ந்துபோன கோலிவுட்

விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், சர்கார், பிகில் மற்றும் மாஸ்டர் உள்ளிட்ட அனைத்து படங்களுமே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் இடம்தான். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கேரளாவிலும் விஜய் படங்கள் நல்ல வசூலை பெற்று புதிய சாதனை படைக்கும்.

இப்படி வசூலில் கலக்கி வரும் விஜய்யை இளம் நடிகர் சிவகார்த்திகேயன் பீட் செய்து விட்டார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான் ஆனால் இந்தியாவில் அல்ல அமெரிக்காவில். தமிழில் வெளியாகும் படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வெளியாவது வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் கடந்த 9ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் தான் டாக்டர். தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது வரை ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியான இரண்டு நாட்களிலேயே டாக்டர் படம் 15 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் வெளியானது. அங்கும் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். அதன் பலனாக டாக்டர் படம் அதிக வசூலை குவித்துள்ளது. இந்த வசூல் விஜய் படத்தின் வசூலை விட அதிகமாம். அந்த வரிசையில் அமெரிக்காவில் டாக்டர் படம் $440K வசூல் செய்துள்ளது. ஆனால், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் $439K தான் வசூலித்துள்ளது.

இதன் மூலம் சிறு வித்தியாசத்தில் சிவகார்த்திகேயன் விஜய்யை முந்தி விட்டார். கொரோனா தொற்று காரணமாக 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு இளம் நடிகரின் படம் இந்த அளவிற்கு வசூல் செய்துள்ளது கோலிவுட்டில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நமிதா.. காரணம் என்ன தெரியுமா.?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் திருநங்கை நமிதா மாரிமுத்து. தன்னுடைய தைரியமான பேச்சின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த போட்டியாளர் இவர். தற்போது நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிவதற்குள்ளாகவே நமிதா பிக்பாஸ் ...