பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பெரிதும் பாராட்டப்பட்டது. அதன்பிறகுதான் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அதிலும் வெற்றி கண்டார்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் வரிசையில் மாளவிகா மோகனன் இடம் பிடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வருவதாகவும் ஆனால் அந்த படத்தின் கதாநாயகன் யார் என்பதையும், தனக்கு என்ன கதாபாத்திரம் என்பதையும் தெளிவாக கேட்டுக் கொண்டுதான் படத்தில் நடிப்பேன் என பல தரப்பினரிடமும் கூறி வருகிறாராம்.

அதற்கு காரணம் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இல்லை என்பதுதான். தற்போது தனுஷ் நடிப்பில் அவருக்கு ஜோடியாக D43 எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகாவுக்கு பெரிய வரவேற்பு இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அப்படித்தான மாளவிகா மோகன் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

படுமோசமான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேரளா கேரளா தான், என்ன பொண்ணுடா என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்