லேடி சூப்பர்ஸ்டார் இடத்தை மீண்டும் பிடிக்க ஆசைப்படும் சிம்ரன்.. இது என்னடா புது உருட்டா இருக்கு!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இடுப்பழகி சிம்ரன் தன்னுடைய நடனத்தாளும், நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் தன் அழகினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

சிம்ரன் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சிம்ரன் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்கள் என்றாலும் சரி, கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்றாலும் சரி எல்லா கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்புவார்.

அப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது சிம்ரன் தான். இப்போது அந்த இடத்தை நயன்தாரா பிடித்துள்ளார். தற்போது சினிமாவில் பல பிரபலங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் பல புரோடக்சன் ஹவுஸ் புதிதாக உருவாகி உள்ளது.

அந்த வகையில் சிம்ரன் இப்போது சூர்யா, ஜோதிகா போல் ஒரு புரோடக்சன் ஹவுஸ் ஆரம்பிக்க பிளான் பண்ணி கொண்டிருக்கிறார். அவர் கணவர் தீபக்கும், இவரும் சேர்ந்து கூடிய விரைவில் புரோடக்சன் ஹவுஸ் அமைக்கப் போகிறார்களாம்.

சூர்யா, ஜோதிகா இருவரும் 2டி என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்கள். இதேபோல்தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல வெற்றி படங்களை தயாரித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து இப்பொழுது தீபக் மற்றும் சிம்ரன் தம்பதியினர் புரோடக்ஷன் ஹவுஸ் ஆரம்பித்து கல்லா கட்ட முடிவு செய்துள்ளனர். இது எந்த அளவுக்கு சிம்ரனுக்கு கை கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இது தவிர சிம்ரன் தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார். எப்படியாவது மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதே சிம்ரனின் ஆசையாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.