லிவிங்ஸ்டன் மகளுடன் கைகோர்த்த சின்னத்திரை பிரபலங்கள்.. சன் டிவியின் பிரமாண்டமான புது சீரியல்!

தமிழ் சினிமாவில் நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர்தான் லிவிங்ஸ்டன். விரலுக்கு ஏற்ற வீக்கம் மற்றும் சொல்லாமலே போன்ற சில திரைப்படங்கள் இவருக்கு வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

தற்போது இவரின் மகள் ஜோவிதா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘பூவே உனக்காக’ என்ற நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்து இருந்தார். தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த நாடகத்தை விட்டு இவர் விலகிவிட்டார்.

தற்போது ஷாக் புரொடக்ஷன்ஸ் மூலம் கன்னட ரீமேக் சீரியலில் இவர் கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம். அதுமட்டுமின்றி இவருடன் இணைந்து நடிக்க பிரபல சின்னத்திரை நட்சத்திரங்களும் கைகோர்க்க உள்ளனராம்.

இந்த புதிய ரீமிக்ஸ் நாடகத்தில் கார்த்திக் வாசு கதாநாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்பிகாவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை ஜோவிதா காலாசல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில காரணத்தினால் இந்த திரைப்படம் திரைக்கு வராத நிலையில் உள்ளது.

தற்போது ஜோவிதா மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுக்கும் இந்த ரீமேக் சீரியல் விரைவில் சன் டிவியின் ஒளிபரப்பாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.