லாலாவை கிண்டலடித்த ரசிகர்.. சரமாரியாக விளாசிய சாண்டியின் மனைவி சில்வியா!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியதன் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் சாண்டி. இவர் தொடக்கத்தில் கலா மாஸ்டரின் மாணவராக இருந்து, அதன்பின் கலைஞர் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடன இயக்குனராக பணியாற்றினார்.

அதன்பின் தற்போது சினிமாவில் நடன இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு பாடல், நடனம் என ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்ததன் மூலம் பிரபலமானார்.

இவர் பிக்பாஸில் இருந்தபோதே அவருடைய குழந்தை லாலா மற்றும் மனைவியை பற்றி அதிகமாக பேசுவார். அதன் காரணமாகவே சாண்டியின் மகள் லாலாவும் பரிச்சயமானார். அத்துடன் சாண்டியின் மனைவி சில்வியா அவ்வபோது லைலாவின்,

புகைப்படம் மற்றும் வீடியோவை சோசியல் மீடியாவில் அப்லோட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்பொழுது லாலாவை பார்த்து, ‘குழந்தை ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறது?

ஒல்லியாக இருந்தால்தானே சாண்டி மாதிரி டான்ஸ் ஆட முடியும்’ என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார். அதற்கு சாண்டியின் மனைவி சில்வியா, ‘குழந்தையை பற்றி தவறாக விமர்சிப்பது முறையா! சமுதாயம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது.

நமது எதிர்கால சந்ததிகளுக்கு ஆரோக்கியமான சமுதாயத்தை காண்பிப்போம்!’ என நெத்தியடி பதில் அளித்துள்ளார். பெரும்பாலோனோர் லாலாவின் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு எக்கச்சக்கமான லைக்குகளை குவித்து வருகின்றனர்.