லாபம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா.? அதிரடியாக வெளிவந்த ட்விட்டர் விமர்சனங்கள்

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் இறுதியாக வெளியாகி உள்ள படம் தான் லாபம். விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதி ஹாசன் முதல் முறையாக இணைந்துள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்தை பார்க்க இயக்குனர் ஜனநாதன் உயிருடன் இல்லை என்பதுதான் உச்சக்கட்ட சோகம்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ஜனநாதன் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி காலமானார். லாபம் படத்தின் எடிட்டிங் பணிகள் நடந்து சமயத்தில் தான் அவர் உயிரிழந்தார். ஆனால் படம் எப்படி வர வேண்டும் என்று அவர் ஏற்கனவே விரிவாக கூறியதை வைத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் சேதுபதியை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் அவர்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அப்படி என்ன கூறியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா? ரசிகர்கள் கூறியிருப்பதாவது, “எஸ்.பி. ஜனநாதனின் அக்மார்க் படம். விவசாயம், கார்பரேட் பற்றி அதிக தகவல் சொல்லும் படம் லாபம். விஜய் சேதுபதி ஆத்து ஆத்துனு சொற்பொழிவு ஆத்தினாலும் அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது.

விவசாயம் தொடர்பாக எத்தனையோ படங்கள் வந்துவிட்டது. இந்நிலையில் ஜனநாதன் தன் ஸ்டைலில் அழகாக சொல்லியிருக்கிறார். ஓவராக அறிவுரை வழங்குகிறார்கள். முடியல” இதுவே லாபம் படம் குறித்து ரசிகர்களின் கருத்துக்கள். ஓரளவிற்கு நல்ல விமர்சனங்களையே லாபம் படம் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகி வரும் படங்கள் வரிசையில் லாபம் ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. எஸ்.பி.ஜனநாதன் மற்றும் விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் லாபம் என்பதால் ரசிகர்கள் இப்படம் மீது அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்நிலையில் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்துள்ளது.