லாஜிக்கே இல்லாத கேஜிஎஃப் 2.. நீங்களெல்லாம் பீஸ்ட் பத்தி பேசவே கூடாது

உலக அளவில் வெளியான கேஜிஎப் சாப்டர் 1 திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் நல்ல வரவேற்ப்பை கொடுத்து கொண்டாடினார்கள். அதனால் மக்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்த படக்குழு தற்போது வெளியாகியிருக்கும் இரண்டாம் பாகத்தில் ஏகப்பட்ட புருடா விட்டு இருக்கிறார்கள்.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருக்கிறது. ஆனாலும் மக்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது ஏன் என்று தெரியவில்லை. அப்படி படக்குழு மிஸ் செய்த சில லாஜிக் மீறல்களை நெட்டிசன்கள் கண்டுபிடித்து தற்போது சோசியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் ஒரு காட்சியில் ஹீரோயின் கரண்ட் இல்லை என்று சொல்வாராம். அதற்கு ஹீரோ ஒரு ஹெலிகாப்டரயே கொண்டு வந்து மாடியில் நிறுத்தி விடுவாராம். இந்த சீனை கேட்கும் போதே படு கேவலமாக இருக்கிறது. ஆனால் இதை மக்கள் நம்புவார்கள் என்று எப்படி படக்குழு முடிவு செய்து இப்படி ஒரு காட்சியை வைத்திருக்கிறார்கள்.

இதை விட ஒரு பெரிய அதிர்ச்சி என்னவென்றால் ஹீரோ பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அவரையே அடிக்க செல்வாராம். அதுமட்டுமல்லாமல் பார்லிமென்ட்டில் புகுந்து அனைவரையும் சுட்டு விடுவாராம். அதில் ஒரு மந்திரி கூட இல்லாமல் அனைவரும் இறந்து விடுவார்களாம்.

மேலும் அனல் பறக்க எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகளில் ஹீரோ கூலிங்கிளாஸ் கண்ணாடியை கழட்டாமலே பறந்து பறந்து சண்டை போடுகிறார். இப்படி படம் முழுக்க வெறும் பில்டப்பும், பிரம்மாண்டமும் தான் இருக்கிறது. அதை தவிர வேறு எதுவும் இல்லை.

பிரம்மாண்டமான திரைப்படம் என்பதால் அதில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு இப்படி சின்னச் சின்ன விஷயங்களில் கூட லாஜிக் இல்லாமல் படத்தை எடுத்துள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் இதையெல்லாம் நம்புவதற்கு நாங்க என்ன அவ்வளவு முட்டாளா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பிட்டு படத்தில் லாஜிக் இல்லாமல் இருந்ததை விட கேஜெட் படத்தில்தான் அதிக லாஜிக் இல்லாமல் இருக்கிறது எனவும் கூறி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் பீஸ்ட் படத்தில்தான் லாஜிக் இல்லை என கூறுகின்றனர். ஆனால் கேஜிஎப் படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் லாஜிக் இல்லாமல் தான் உள்ளனர். ஆனால் ரசிகர்கள் இப்படத்தை ஆகா ஓகோ என புகழ்கின்றனர் இதற்கு காரணம் என்னவென்றால் ஒரு சிலருக்கு விஜய் உடைய வளர்ச்சி பிடிக்காமல் இருப்பதற்கு காரணம் எனவும் கூறி வருகின்றனர்.